Connect with us
mani

Cinema News

அவளாம் எனக்கு ஜோடியா?!.. கடுப்பான கவுண்டமணி.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாகவே வாழ்ந்தவர் நடிகர் கவுண்டமணி. இவருக்கு சிறுவயதில் இருந்தே நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. அதன் காரணமாகவே முதன் முதலில் நாடக மேடையில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் விளைவாகவே வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்ததது. சினிமாவில் அனைவரையும் தன் வசனத்தில் வெளுத்து வாங்கும் நடிகராக கவுண்டமணி திகழ்ந்தார். சகட்டுமானக்கி அனைவரையும் கிண்டல் அடித்து பேசக்கூடியவர்.

மேலும் அரசியலையும் தன் வசனங்கள் மூலமாக போட்டு தாக்கியிருக்கிறார். பொதுவாக ஒரு நடிகர் வளர்ந்து விட்டால் அவர்களை பற்றி தேவையில்லாத சில வதந்திகளும் செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கும். அதே போல் தான் கவுண்டமணி பற்றி தேவையில்லாத சில கிசுகிசுக்கள் பரவியது.

இந்த நிலையில் நடிகை பசி சத்யா கவுண்டமணி பற்றிய ஒரு தகவலை கூறினார். நாடகத்தில் பசி சத்யாவுடன் கவுண்டமணி ஹீரோவாக பல நாடகங்களில் நடித்திருக்கிறாராம்.பொதுவாக கவுண்டமணி மிகவும் நல்ல நடிகர் என பசி சத்யா கூறினார்.

மேலும் கூறும் போது மலையாளத்தில் பேபி என்ற இயக்குனர் இயக்கிய படம் சங்குபுஷ்பம். அதை தமிழில் ரீமேக் எடுத்தார்கள். அந்தப் படத்தை தயாரித்தவர் விஜயனாம். அந்தப் படத்தில் ஒரு அம்மா தன் கணவனின் கொடுமையால் வயிற்றில் இருக்கும் குழந்தையை இழக்கிறாள். அதனால் அந்த தாய் பித்துப் பிடித்தவள் போல் ஆகிவிடுகிறாள்.

இந்தக் கதையில் பசி சத்யா மற்றும் அவருக்கு ஜோடியாக கவுண்டமணி நடிப்பதாக இருந்ததாம். பசி சத்யாவை பார்த்ததும் கவுண்டமணி தயாரிப்பாளரிடம் ‘இவளலெல்லாம் எதுக்கு போடுறீங்க, வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம்ல’ என்று கேட்டாராம். அதற்கு விஜயன் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க : அந்த பொண்ணு கூடலாம் ஆட மாட்டேன்!.. முரண்டு பிடித்த எம்.ஜி.ஆர்.. ஆனா நடந்தது வேறு!…

அதன் பிறகு கவுண்டமணி கதாபாத்திரத்தில் நடிகர் அனுமந்த் நடித்தாராம். இந்த செய்தியை பசி சத்யா ஒரு பேட்டியின் மூலம் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top