More
Categories: Cinema News latest news

“நானும் ஹீரோயினோட டான்ஸ் ஆடுவேன்”… இயக்குனரிடம் அடம்பிடித்த கவுண்டமணி…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வரும் கவுண்டமணி, தொடக்கத்தில் “சர்வர் சுந்தரம்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து “தேனும் பாலும்”, “அன்னக்கிளி” போன்ற திரைப்படங்களில் நடித்த கவுண்டமணி. “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார்.

Goundamani

நாடகத்துறையில் கவுண்டமணி

Advertising
Advertising

கவுண்டமணி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து, நாடக கம்பெனியில் சேர்ந்தார். அதில் பல நாடகங்களில் நடித்த அனுபவம்தான் அவரை சினிமாவிற்கு கூட்டிக்கொண்டு வந்தது.

செந்தில்-கவுண்டமணி

ஹாலிவுட்டின் லாரல்-ஹார்டி ஆகிய காமெடி காம்போவுக்கு இணையான காம்போவாக செந்தில்-கவுண்டமணி காம்போ புகழப்பட்டது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். “கரகாட்டக்காரன்”, “தங்கமான ராசா” போன்ற பல திரைப்படங்கள், இருவரும் இணைந்து  நடித்ததில் மிகப் பிரபலமாக அறியப்பட்டது.

Goundamani and Senthil

ஜென்டில்மேன்

1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஜென்டில்மேன்”. இத்திரைப்படத்தில் செந்தில்-கவுண்டமணி காம்போ, காமெடி காட்சிகளில் வெளுத்து வாங்கியிருப்பார்கள். குறிப்பாக “டிக்கிலோனா”, “சப்ளிங்” போன்ற காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது.

Gentleman

ஒட்டகத்த கட்டிக்கோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. “சிக்குபுக்கு ரயிலே”, “என் வீட்டுத் தோட்டத்தில்”, “ஒட்டகத்தை கட்டிக்கோ” போன்ற பாடல்கள் காலத்தை கடந்தும் நிற்கக்கூடிய பாடல்களாக அமைந்தன.

ஹீரோயின் கனவு பாடலில் கவுண்டமணி

இதில் அர்ஜூன், மதுபாலாவுடன் கவுண்டமணியும் இணைந்து ஆடிய “ஒட்டகத்தை கட்டிக்கோ” பாடலை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை நடிகர் காதல் சுகுமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் கோடி ரூபாய் வாங்கிய முதல் படம்… அதுவும் யார் எடுத்த படம் தெரியுமா??

Gentleman

அதாவது கவுண்டமணியின் கால் ஷீட் வரும் தேதியில்தான் இப்பாடல் படமாக்கப்பட்டதாம். ஆதலால் தானும் இந்த பாடலில் ஆடப்போவதாக இயக்குனரிடம் கவுண்டமணி அடம்பிடித்தாராம்.

அப்போது அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் “சார், இது ஹீரோயினோட கனவுப் பாடல். இதில் நீங்கள் வந்தால் லாஜிக் இடிக்குமே” என கேட்டிருக்கிறார். அதற்கு கவுண்டமணி “ஹீரோயின் கனவுல 20 டான்சர் வரலாம். ஹீரோவோட ஃபிரண்டா நடிக்கிற நான் வரக்கூடாதா?” என கேட்டாராம். அதன் பிறகுதான் அந்த பாடலில் அவர் நடனமாட இயக்குனர் சம்மதித்தாராம்.

Published by
Arun Prasad

Recent Posts