நல்ல செண்டிமெண்டான சீன்! யாரும் எதிர்பாராத கவுண்டரை அடித்து ரணகளம் செய்த கவுண்டமணி

Published on: March 26, 2024
goundamani
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடியில் ஒரு தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டருக்கு பேர் போன கவுண்டமணி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தவர். ரஜினிக்கு சில சமயங்களில் டஃப் கொடுக்கும் நடிகராக ஒரு சில காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட கவுண்டமணி பல நடிகர்களின் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலை எதுவோ அதை மிகவும் சிறப்பாக செய்தவர்.

இதையும் படிங்க: ஒரே வருடத்தில் 20 படங்கள்!.. பறந்து பறந்து நடித்த ரஜினிகாந்த்!.. எல்லாமே சூப்பர் ஹிட்டு!..

அஜித்தைப் போலவே கவுண்டமணியும் தனக்கென எந்த ஒரு ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று ஒரு குறிக்கோளில் இருந்தவர். பெரும்பாலும் சத்யராஜ் கவுண்டமணியின் கூட்டணி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர்களை அடுத்து கவுண்டமணி கார்த்திக் கூட்டணி ரசிகர்களை ஈர்த்தது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுராஜ் கவுண்டமணி பற்றிய ஒரு தகவலை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் கண்ணன் வருவான். அது முழுக்க முழுக்க ஒரு சென்டிமென்டான படம்.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வாங்கிறதெல்லாம் பெரிய விஷயமா? அந்த மேடையிலே இப்டி பேசி இருக்காரே இளையராஜா!…

படத்தின் கதைப்படி கார்த்திக் வெளிநாட்டிலிருந்து வர அவருக்கு பிடித்தவை எல்லாம் வீட்டில் சமைத்து வைத்திருப்பார்கள். மனோரமா மட்டும் பால் சோறு தனியாக செய்து வைத்திருப்பார்.

கதைப்படி கார்த்திக் வெளிநாட்டில் இருந்து வந்ததும் சாப்பிட செல்ல அங்க பார்த்தவை எதையுமே கார்த்திக் விரும்ப மாட்டார். எதுவும் வேண்டாம் என சொல்ல மனோரமா தன் பின்னால் வைத்திருந்த பால் சோறை எடுத்து கார்த்திக்குக்கு பிடிக்குமே என ஊட்டி விடுவார். இதுதான் அந்த சீன்.

இதையும் படிங்க: பல படங்களில் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பு!.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே கங்கை அமரன்!..

இந்த சீன் எடுத்து முடித்ததும் சுராஜை அழைத்த கவுண்டமணி  ‘என்ன சுராஜ் எங்க ஊர்ல பால் சோறை நாய்க்கு தான் ஊட்டுவோம். ஆனால் நீங்கள் இதை சென்டிமென்ட்டா கொண்டு போயிட்டீங்க. இந்த படத்துக்கு திரைக்கதை வசனம் யார் எழுதினா? காமெடி படம்னு சொல்லி என்ன இந்த மாதிரி சென்டிமென்டான படத்துல நடிக்க வச்சிட்டீங்களே’ என்ன சொல்லி கிண்டல் அடித்தாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.