Connect with us
gangai

Cinema History

பல படங்களில் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பு!.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே கங்கை அமரன்!..

Gangai Amaran: இளையராஜா இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தபோதே பெரிய பாடகராக வேண்டும், பாடலாசிரியர் ஆக வேண்டும் என அவருடன் வந்தவர்தான் அவரின் சகோதரர் கங்கை அமரன். சென்னை வருவதற்கு முன் கவிஞர் வாலியிடம் உதவியாளராக சேர அவருக்கு கடிதம் எழுதி வந்தார்.

ஆனால், வாலி அதை கண்டுகொள்ளவில்லை. சினிமாவில் அண்ணன் இளையராஜா இசையமைப்பாளராக மாறியதும் அவருக்கு உறுதுணையாக இருந்தார் கங்கை அமரன். இளையராஜா கோபக்காரர், டக்கென வார்த்தைகளை விட்டுவிடுவார் என்பதால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இளையராஜாவுக்கு இடையே பாலமாக இருந்தார்.

இதையும் படிங்க:  எனக்கு விஜய் போட்ட உத்தரவு! போன் பண்ணி கேட்டாரு.. கங்கை அமரன் கூறிய சீக்ரெட்

இளையராஜாவின் இசையில் பல பாடல்களை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். பாடியிமிருக்கிறார். ஒருகட்டத்தில் தனியாக இசையமைக்கவும் துவங்கினார். இதனால், இளையராஜாவின் கோபத்திற்கும் ஆளானார். அதோடு, இயக்குனராகவும் மாறினார். கோழி கூவுது, ஊரு விட்டு ஊரு வந்து, கரகாட்டக்காரன், கும்பகரை தங்கையா, கோவில் காளை, சின்னவர், தெம்மாங்கு பாட்டுக்காரன் என பல படங்களை இயக்கி இருக்கிறார்.

இப்படி பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை கங்கை அமரன் எடுத்திருக்கிறார். அதேநேரம், அவரை தனது பல படங்களில் ஹீரோவாக நடிக்க வைக்க ஒரு இயக்குனர் ஆசைப்பட்டார் என்றால் நம்ப முடிகிறதா அவர்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் வரிகளை மாற்றிய கங்கை அமரன்!.. கடுப்பாகி கத்திய இளையராஜா!…

புதிய வார்ப்புகள் படத்தை இயக்கிய போது அவர் ஹீரோவாக நடிக்க கேட்டது கங்கை அமரனைத்தான். ஆனால், அவர் நடிக்க மறுத்ததால் பாக்கியராஜ் நடித்தார். அதேபோல், நிழல்கள் படத்தில் நடிக்கவும் அவர் கங்கை அமரனிடம் கேட்டார். ஆனால் மறுத்துவிட்டார் கங்கை அமரன். அதோடு பாரதிராஜா விட்டார் என்றால் இல்லை.

அவர் இயக்கிய காதல் ஓவியம் படத்தில் ராதாவுக்கு ஜோடியாக அவர் கங்கை அமரனை ஹீரோவாக நடிக்க சொன்னார். ஆனால், அதில் கங்கை அமரனின் மனைவிக்கு விருப்பமில்லை. எனவே, கங்கை அமரன் நடிக்கவில்லை. இப்படி 3 முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டவர்தான் கங்கை அமரன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top