தமிழ் சினிமாவின் நகைச்சுவை சூறாவளியாக வலம் வந்தவர் கவுண்டமணி. இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நாடக சபாவில் பல நாடகங்களில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தார். அந்த மேன்சனில் பல நாடக நடிகர்கள் தங்கியிருந்தனர். பின்னாளில் அந்த மேன்சனில் இருந்து கவுண்டமணி போல் பல நடிகர்கள் சினிமாவிற்குள் வந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.
கவுண்டமணி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் தங்கியிருந்த மேன்சனில் ஒரு இளைஞரும் தங்கியிருந்தார். அவர் இரவெல்லாம் குண்டு பல்பின் வெளிச்சத்தில் கதை எழுதிக்கொண்டே இருப்பாராம். அந்த இளைஞரை கவுண்டமணி அவ்வப்போது டீ வாங்கிட்டு வர சொல்லி அனுப்புவாராம். அதுவும் அந்த இளைஞன் எழுதிகொண்டிருக்கும்போதே “என்னடா எப்போ பாரு எழுதிகிட்டே இருக்க? போ போய் டீ வாங்கிட்டு வா போ” என சொல்லுவாராம்.
அப்போது அவர்களுடன் தங்கியிருந்த கல்லாப்பட்டி சிங்காரம் “எதுக்குண்ணே எழுதிட்டு இருக்குறவனை பிடிச்சி டீ வாங்கிட்டு வர சொல்றீங்க?” என கேட்பாராம். அதற்கு கவுண்டமணி, “ஆமா இவர் எழுதி தமிழ் சினிமாவை அப்படியே நிமுத்தப்போறாரு” என கூறுவாராம். அவர் நக்கலுக்காக அப்படி கூறியது பின்னாளில் உண்மையாக ஆனது. ஆம்!
அந்த இளைஞர்தான் கே.பாக்யராஜ். பின்னாளில் தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என போற்றப்பட்ட இயக்குனராக திகழ்ந்தார் பாக்யராஜ். பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் கவுண்டமனிக்கு பாக்கியராஜே வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதே போல் தன்னுடன் இருந்த கல்லாப்பட்டி சிங்காரத்திற்கு பல திரைப்படங்களில் வாய்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இயக்குனர் எவ்வளவு சொல்லியும் சரியாக நடிக்க மறுத்த கமல்!.. இதுதான் காரணமாம்…
Pushpa 2:…
தமிழ் சினிமாவில்…
சொர்க்கவாசல் திரைப்படம்…
Lucky Bhaskar:…
தனது வருங்கால…