கவுண்டமணியின் வெற்றிக்கு பின்னால் இருந்த அந்த நடிகர்!.. அவர் மட்டும் இல்லன்னா!…

Published on: December 3, 2023
mani
---Advertisement---

Actor Goundamani: தமிழ் சினிமாவில் கலைவாணருக்கு பிறகு மக்கள் மத்தியில் நகைச்சுவைக்கு பேர் போனவர் நடிகர் கவுண்டமணி. நகைச்சுவையில் ஒரு சில பேர் தான் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் கவுண்டமணி மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார்.

அவருடைய பல வசனங்கள் இன்று மீம்ஸ்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. காமெடி நடிகர்கள் பலர் வந்தாலும் தனக்கென தனி பாணியை வளர்த்துக் கொண்டு சிகரம் தொட்டவர் கவுண்டமணி. காமெடி மட்டுமல்லாது குணசத்திர கதாபாத்திரம் வில்லன் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.

இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…

நடிகர்களில் சத்யராஜ் உடன் அதிக படங்களில் நடித்து இருவரும் காமெடி காட்சிகள் பின்னி எடுத்து இருப்பார்கள். தொடர் வெற்றிக்குப் பின் பல படங்களில் நடித்த இவரின் தனி அடையாளமே முகத்தை சுளித்துக்கொண்டு பேசுவது தான்.

பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவையாக கூறி மக்களை ரசிக்க வைத்தவர் கவுண்டமணி. அரசியலில் இருக்கும் நுணுக்கங்களையும் அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களையும் மிக தைரியமாக தன் காமெடியில் எடுத்துக் கூறியவர்.

இதையும் படிங்க: என்னவேணுனாலும் சொல்லுங்கப்பா! இதுல நான்தான் கிங் – ரஜினியை விட மாஸ் காட்டிய விஜய்

இப்படி கவுண்டமணியின் காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணமாக இருந்தவர் கவுண்டமணியின் வசனகர்த்தாவாக இருந்தவர் வீரப்பன். இவரும் ஒரு நகைச்சுவை நடிகராம். எம்ஜிஆர் நடித்த பணத்தோட்டம் படத்தில் மெயின் காமெடியனாக நாகேஷுடன் நடித்தவர்தான் இந்த வீரப்பனாம்.

அவர்தான் பின்னாளில் கவுண்டமணிக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். கவுண்டமணி நடித்த படங்களில் டைட்டில் கார்டிலேயே இவர் பெயர் இடம்பெற்றிருக்கும். நாட்டிய சிந்தனையாளராகவே இருப்பாராம் வீரப்பன்.

இதையும் படிங்க: நாடகம் to சினிமா.. கம்பீரமான குரல்.. கவரும் நடிப்பு… மறக்க முடியாத மேஜர் சுந்தர்ராஜன்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.