சக்கர பொங்கலும் வடகறியும் செட் ஆகுமா!...ஷாக் கொடுத்த கவுதம் மேனன்.....

by சிவா |   ( Updated:2022-02-15 02:54:20  )
vadivel
X

தமிழ் சினிமாவில் ஸ்டைலீசான திரைப்படங்களை இயக்கி வருபவர் கவுதம் மேனன். ஸ்டைலான காதல் அல்லது ரவுடிசிம் என இரண்டு தளங்களிலும் கால் பதித்தவர். தன்னை ஸ்டைலாக காட்டுவார் என்பதால் அவரின் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே ஆசைப்படுவதுண்டு.சூர்யா, அஜித், தனுஷ், சிம்பு, கமல்ஹாசன் ஆகியோரை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலுவை தான் இயக்கவிரும்புவதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு நகைச்சுவை காதல் படமாக இருக்கும். அத அவரால் சிறப்பாக செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Next Story