குண்டா இருக்குற பொண்ணுக்காக இன்னொரு கல்யாணமா..? பாக்யராஜை திட்டிய பாட்டி

by sankaran v |
குண்டா இருக்குற பொண்ணுக்காக இன்னொரு கல்யாணமா..? பாக்யராஜை திட்டிய பாட்டி
X

Chinna veedu

பாக்யராஜ் எப்போதுமே தாய்க்குலங்களை கவரும் வகையில் தான் படம் எடுப்பார். அந்த வகையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கிரைம் படமாக விடியும் வரை காத்திரு படத்தை எடுத்தார். இது ஆண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் பெண்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதுபற்றி தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, மவுன கீதங்கள்னு எல்லாமே அழுத்தமான கதை. காமெடி கலந்தது. பெண்களுக்கு ரொம்ப பிடிக்கக்கூடியது. எனக்கு ரொம்ப ரசிகைகள் தான் அதிகம். எனக்கு பலம்.

Packyaraj

ஒரே மாதிரி படம் பண்ணக்கூடாதுன்னு ஒவ்வொரு படமும் வேறு வேறு களங்களில் எடுத்து வித்தியாசப்படுத்தினேன். அந்த வரிசையில் ஒரு கிரைம் எடுக்கலாம்னு நினைச்சது தான் விடியும் வரை காத்திரு.நான் சினிமாவுக்கு வரப்போ முதன் முறையா வாய்ப்பு தேடித்தந்தது தூயவன் சார் தான். அவர் தான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர். அந்தப் படத்துல கிரைம் கொஞசம் வித்தியாசமா இருக்கணும்னு பண்ணுனோம்.

அந்தப் படத்துல வந்து நிறைய வித்தியாசமான அனுபவங்கள் இருந்தது. கிரைம்ல ட்ரெய்ன் எபிசோடுக்கு தியேட்டர்ல கைதட்டல். 'இப்படி ஒரு டுவிஸ்டு. உங்கக்கிட்ட நாங்க எதிர்பார்க்கல'ன்னு ஜென்ட்ஸ்ங்க கிட்டலாம் நல்ல வரவேற்பு இருந்துச்சு.

லேடீஸ் சைடுல வேற மாதிரி ஆகிப்போச்சு. மௌனகீதங்கள் படத்துல மனைவிக்கு அவ்வளவு மரியாதை கொடுத்திருப்பேன். அப்ப ஈரோடு பக்கம் கார்ல வந்துக்கிட்டு இருந்தேன். படம் விட்டு ஜனங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வந்தாங்க. என்ன படம்னு டிரைவர்ட கேட்டேன். உங்க படம் விடியும் வரை காத்திரு தான் என்றார். சரி. வண்டிய மெதுவா ஓட்டு.

ஜனங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டே வருவோம்னு சொன்னேன். நான் காதுவரை மப்ளர் போட்டு கண்ணாடியை கொஞ்சம் இறக்கி விட்டு வந்து கொண்டு இருக்கிறேன். அப்ப ஒரு லேடீ வந்து இந்தப் படம் சரியில்லையே என்று சொல்ல அருகில் சென்ற பெண் அப்படிலாம் இல்ல... நல்லா தான் எடுத்துருக்காருன்னு சொன்னார். இல்லீங்க தப்பு தப்பா காமிக்கிறாங்க.

VVK

அவரு மனைவி மேல எவ்ளோ இதா இருப்பாரு. இதுல எப்பப் பார்த்தாலும் துப்பாக்கியை எடுத்துக்கிட்டு கத்தியை எடுத்துக்கிட்டு கொல்ற மாதிரி காட்றாங்க. இதை யாரோ தப்பா எடுத்துட்டாங்க. அவரு எவ்ளோ நல்லவரு...ன்னு சொல்ல நாங்க அப்படியே கேட்ட எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரில. அவங்க சினிமாவை அப்படியே எடுத்துக்கிட்டாங்க. அதுல இருந்து மாறுவதில்லை. இந்த அனுபவங்கள் எனக்கு வித்தியாசமான அனுபவமா இருந்தது.

விடியும் வரை காத்திரு படத்துல நான் நெகடிவ் ரோல். அதே மாதிரி தான் சின்ன வீடு படத்திலயும். அதைப் பார்த்துட்டு குண்டா இருக்குற பொண்ணுக்காக இன்னொரு கல்யாணமா..?ன்னு எங்க பாட்டி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. இனிமே சினிமாவுக்குக் கதை எழுதுனா எங்கிட்ட கேட்டுட்டு எழுதுன்னாரு. அதனால சினிமாவுல முடிஞ்ச வரைக்கும் பாசிடிவ்வாவே செய்வோம்.

Next Story