பாட்டிம்மாவை ஏமாற்றிய பயபுள்ளைங்க… விஜய்க்கு கூட்டம் சேர்க்க இப்படியா பண்ணுவீங்க?

vijay and paatti
Vijay TVK: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து விஜய் மாஸ் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு என்ன தெரியும்? அரசியல் என்ன சினிமாவான்னு எல்லாம் ட்ரோல் பண்ணினாங்க. ஆனா அதே சினிமா வசனம் போல அரசியலிலும் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ரசிகர்கள் அவர் எங்கு சென்றாலும் அலைகடலென ஆர்ப்பரிக்கின்றனர்.
சமீபத்தில் கோவை ரோடு ஷோவைப் பார்த்து அனைத்துக் கட்சியினரும் திகைத்து விட்டார்களாம். அவ்ளோ கூட்டமாம். அந்த வகையில் நேற்று மதுரை வந்த விஜய், அதற்கு கூடிய கூட்டம், பாட்டியின் அதகளம் எல்லாம் பேசுபொருளாகவே பார்க்கப்படுகிறது.
மதுரைக்கு நேற்று விஜய் வர்றான்னு சொன்னதும் அதிகாலை முதலே விமான நிலையத்தில் குவிந்தது கூட்டம். உற்சாகத்தில் எப்படியாவது விஜயைப் பார்த்து விடணும்னு ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. நேற்று மே தினம். தொழிலாளர் தினம். விடுமுறை என்பதாலும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது.
குறிப்பாக தாய்மார்களின் கூட்டம் அலைகடலென திரண்டு வந்து இருந்தது. இதுல என்ன வேடிக்கைன்னா பாட்டி ஒருவரிடம் ரஜினி வரார். வாங்கன்னு அழைச்சி வந்துருக்காங்க. அவரும் கூட்டத்தில் டிவி நிருபர்கள் பேட்டி எடுக்க வரும்போது 6 மணியா ஆனாலும் நாங்க போக மாட்டோம். உங்க படம் வந்தா நான் சோறு பொங்க மாட்டேன். குழம்பு வைக்க மாட்டேன்.

ரஜினின்னு டன்டனக்கா டன்டனக்கான்னு ஆட்டம்போடுகிறார் அந்தப் பாட்டி. பாவம் உண்மையிலேயே அந்தப் பாட்டிக்கு விஜய்தான் வர்றான்னு தெரியாது. தெரிஞ்சா இப்படி ஆட்டம் போட்டு இருப்பாரா? கூட்டம் சேர்க்கணும்கறதுக்காக பாட்டிக்கிட்ட எல்லாமா கப்சா விடுவாங்க விஜய் தொண்டர்கள்னு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் மதுரை வந்ததே வேறு. அவர் அந்த வழியாகக் கொடைக்கானலுக்கு ஜனநாயகன் படப்பிடிப்புக்காகப் போய் இருக்கிறார். ஆனால் அங்கு வந்து ஏதோ பேசுவார் என்றும் ரசிகர்கள் நினைத்தபடி திரண்டு வந்திருந்தனர். எல்லாரும் பைக்ல வேகமா போகாதீங்க. ஹெல்மெட் போட்டுப் போங்கப்பா… எனக்கு ஒரே பதட்டமா இருக்குன்னு விஜய் அட்வைஸ் பண்ணிட்டுப் போய்ட்டாரு. அவ்ளோதான்.
இதற்கான வீடியோவைக் காண:
பாட்டிமா Rocked - TVK Shocked🤗
— Kovai Nithya (@KovaiNithya) May 2, 2025
ரஜினி வரார்ன்னு ஆள சேர்த்து இருக்காங்க பயபுள்ளக..😂😂#தற்குறி_விஜய்_கழகம் pic.twitter.com/F23YabpIpQ