தமிழ்ப்பட உலகில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். கதாநாயகனை விட வில்லன் சிறப்பாக நடிப்பார். இல்லாவிட்டால் காமெடியன் அதகளப்படுத்துவார். அதே போல கதாநாயகியை விட துணைநடிகை அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார். அதாவது அவருடன் வரும் தோழி அந்த கதாநாயகியை விட அழகாக இருப்பார். இதனால் தொடர்ந்து அந்த துணை நடிகையை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.
அதனால் பல படங்களில் கதாநாயகியை விட அழகில் குறைந்த நடிகைகளைத் தான் தோழியாக நடிக்க வைப்பார்கள். 2020ல் வெளியான ஒரு படத்திலும் இது போன்ற அதிசயம் நடந்தது. ஜகமே தந்திரம் என்ற இந்தப் படத்தில் நாயகியாக நடித்தவர் சஞ்சனா நடராஜன்.
இவரை விட அழகாக அந்தப் படத்தில் ஒரு நடிகை வருவார். அவர் வேறு யாருமல்ல. அந்தப் படத்தில் ரக்கிட ரக்கிடன்னு ஒரு பாடல் வரும். வாய்ப்பு கிடைத்தால் பாடலை யூடியூப்பில் பாருங்கள்.
சஞ்சனாவை விட அழகாக அவருடன் இணைந்து குரூப் டான்சாராக ஆடிய ஒரு நடிகை அசத்தியிருப்பார். அவ்வளவு கியூட்டாக இருப்பார். அவர் யாராக இருக்கும் என்று இணையதளத்தில் நெட்டிசன்கள் வலை விரித்து தேட ஆரம்பித்து விட்டனர். அதன்பிறகு தான் தெரிந்தது அவர் பெயர் ஹேமா தயாள் என்று.
அடுத்த சில மணித்துளிகளில் இன்ஸ்டாகிராமில் அவரது அக்கவுண்டிலேயே கணக்கை ஆரம்பித்து விட்டார்கள். பாலோயர்ஸ் எண்ணிக்கை எகிறியது. அதே போல யூடியூப்பிலும் பல சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேட்டி எடுக்க ஆரம்பித்து விட்டன.
இனி இவருக்கு பல படவாய்ப்புகளும் வந்துவிடும். அதன்பிறகு இவரும் ஒரு ஹீரோயினாக வலம் வந்து அசத்தி விடுவார். பல தயாரிப்பாளர்களும் அவருடைய கால்ஷீட்டுக்காகத் தவம் கிடப்பர். இதுதானே சினிமா உலகம். அன்று கீழே இருந்தவர்கள் இன்று தன் திறமை, அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வந்து விடுகின்றனர். அதனால் யார் யார் எப்படி மாறுவார் என்பதை கணிக்க முடியாத கனவுலகம் தான் இந்த சினிமா உலகம்.