உண்மையை சொன்னதால் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை இழந்த ஜிவி.. அரிச்சந்திரன் பரம்பரையா இருப்பார் போல
GV Prakashkumar: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இவர் ஏஆர் ரஹ்மானின் மூத்த சகோதரியான ஏஆர் ரைஹானாவின் மகன் ஆவார். ரைஹானாவும் ஒரு பின்னனி பாடகி ஆவார். ஜிவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த நடிகைதான் ஜிவியின் தங்கை ஆவார்.
முதன் முதலில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி. வெயில் படம் ஒரு ஆல்பம் ஹிட். முதல் படத்திலேயே தரமான இசையை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை எடுத்தார் ஜிவி. இந்த நிலையில் வெயில் படத்திற்கு முன்பாகவே ஒரு சூப்பர் ஹிட் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை தன் வாயாலேயே இழந்த சம்பவம் பற்றி ஜிவி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ‘கோட்’ ரிலீஸ் ஆகும் வரை கம்முனு இருங்க! ரசிகர்களை கப் சிப்பாக்கிய் விஜய்.. ஒரு முடிவோடத்தான் இருக்காரு
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்த திரைப்படம்தான் காதல். இந்தப் படத்தில் முதலில் ஜிவி தான் இசையமைக்க வேண்டியது. ஜிவியிடம் பாலாஜி சக்திவேல் ‘தம்பி இந்த முதல் வாய்ப்பை பெற நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப அப்படித்தானே? கசக்கி பிழிஞ்சிருப்பாங்க சரியா?’ என கேட்டாராம்.
அதற்கு ஜிவி ‘எதுவும் யோசிக்காம அப்படிலாம் இல்ல சார். நான் விளம்பரங்களுக்கு பண்ணியிருக்கிறேன். மியூசிக்கில் எனக்கு ஒரு பெரிய தேடல் இருக்கிறது. இத கேளுங்க. புடிச்சிருந்தா கூப்பிடுங்க’ என கூறினாராம்.
இதையும் படிங்க: அப்பாவியாக நடித்த சைதன்யா… சமந்தாவை பழிகடாவாக்கிய வக்கிர பின்னணி…
அவ்வளவுதான் . பாலாஜி சக்திவேல் டென்ஷன் ஆகிவிட்டாராம். அதன் பிறகு ‘பேசாம ஆமானு சொல்லியிருக்கலாம்’ என ஜிவி யோசித்தாராம். ஆனால் நான் உண்மையாக இருக்கவேண்டும் என நினைத்தேன். பொய் சொல்லியோ ஒரு பர்ஃபாமன்ஸ் பண்ணியோ இருக்க வேண்டும் என நினைக்கல.
உண்மையா இருந்ததனால் காதல் பட வாய்ப்பை இழந்தேன் என்று ஜிவி கூறினார். பின் வெயில் படத்தில் வாய்ப்பு வந்து அதில் இசையமைத்திருக்கிறார். இதை அறிந்த பாலாஜி சக்திவேல் வெயில் பட இயக்குனரிடம் ‘இதை ஜிவிதான் மெட்டு போட்டானா?’ என சந்தேகத்துடன் கேட்டாராம்.
இதையும் படிங்க: இத செஞ்சா இருக்கிற இடுப்பும் போயிடுமே! முதன் முறையாக இடுப்பழகின் ரகசியத்தை பகிர்ந்த சிம்ரன்
அதற்கு வெயில் பட இயக்குனர் ஆமாம் என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் பாலாஜி சக்திவேலுக்கு நம்பிக்கையே இல்லையாம். மீண்டும் மீண்டும் ‘ஜிவி மெட்டு போடும் போது நீ பார்த்தீயா? அவனேதான் போட்டானா’ என்றெல்லாம் கேட்டாராம். ஏனெனில் அப்படி பேசியவனா வெயில் படத்தில் இந்தளவுக்கு பாட்டு போட்டிருக்கிறான் என்ற ஆச்சரியத்தை பாலாஜி சக்திவேலுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.