ஜிவி.யுடன் டேட்டிங் கிசுகிசு… திவ்யபாரதியின் தடாலடி பதில்!

gv prakash divyabharathi
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சுக்கும், நடிகை திவ்யபாரதிக்கும் டேட்டிங் என கிசுகிசுக்கள் வந்தன. அப்போது ஜிவி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
எனக்கும் திவ்யபாரதிக்கும் டேட்டிங் எதுவும் இல்லை. அவரை சூட்டிங் ஸ்பாட்ல மட்டுமே சந்தித்துள்ளேன். அதைத் தாண்டி எங்கும் சந்தித்தது இல்லை. ஆனால் அவர் ஒரு நல்ல நண்பர் என ஏற்கனவே கிங்ஸ்டன் படத்தின் விழாவில் ஜிவி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். அப்போது திவ்யபாரதி இதுகுறித்து பேசும்போது எனக்கும் பலர் மெசேஜ் அனுப்புவாங்க. அப்போது இவருக்கு நான் அனுப்புவேன். இவரோ விடுங்க பார்த்துக்கலாம்னு சொல்வார். சில சமயங்களில் கஷ்டமாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் தற்போது திவ்ய பாரதி ஸ்டேட்மெண்ட் கொடுத்து பரபரப்பு ஆக்கியுள்ளார்., எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் எனது பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜிவி.யின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன். நிச்சயமாக திருமணமான ஆணுடன் இல்லை என நடிகை திவ்ய பாரதி பரபரப்பு ஆக்கியுள்ளார்.
ஜிவி. பிரகாஷ் உடன் திவ்யபாரதி பேச்சிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் மீண்டும் கிங்ஸ்டன் படத்தில் இந்த ஜோடி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை குறித்து திவ்யபாரதி ஒருமுறை இப்படி சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே ஜிவி.பிரகாஷ், சைந்தவி திருமணம் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே பெரும் பிரச்சனையாக இருக்கும் இந்த நிலையில் திவ்யபாரதி இப்படி பேட்டி கொடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.