Ajith 63: துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மங்காத்தா படத்திற்கு பின் அஜித்துடன் திரிஷா நடிக்கும் படம் இது. இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறார்.
வெளிநாட்டுக்கு மனைவியோடு அஜித் செல்லும்போது திரிஷாவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அஜித் எப்படி தனது மனைவியை மீட்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அசர் பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
Also Read
இதையும் படிங்க: அஜித் பட ஹீரோயினுக்கும் எனக்கும் லவ்வா? பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபலம்
பொதுவாக அஜித் ஒரு படம் நடித்து முடித்து பல மாதங்கள் கழித்துதான் தனது அடுத்த படத்தை முடிவெடுப்பார். துணிவு படம் வெளியாகி 10 மாதம் கழித்துதான் விடாமுயற்சி படத்திலேயே அவர் நடிக்க துவங்கினார். ஆனால், விடாமுயற்சி படத்தில் நடிக்கும்போதே தனது அடுத்த அதாவது 63வது படத்தை முடிவெடுத்துவிட்டார்.
இந்த படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் பெரிய பட்ஜெட்டுகளில் படங்களை இயக்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என ஏற்கனவே செய்தி வெளியானது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்காக இணையும் ஒட்டுமொத்த கோடம்பாக்கம்! முக்கிய தகவலை பகிர்ந்த விஷால்
இந்நிலையில், இப்படம் பற்றிய சில முக்கிய அப்டேட்டுகள் இப்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. 2025ம் வருடம் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
மேலும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் எனவும், நடிகை தபு இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, இப்படம் முடிந்தவுடனேயே அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..



