தனுஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷா? அந்த படத்தில் நடக்க இருக்கும் சூப்பர் ட்விஸ்ட்…
Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பு ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், இயக்கத்திலும் செம கவனமாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு அதீத எதிர்பார்ப்பும் இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கிட்டத்தட்ட படம் மிகப்பெரிய நஷ்டத்தினையே சந்தித்தது. இப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.
இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலக கமல்தான் காரணமா? வெளியான ஷாக் தகவல்
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜூனா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க தனுஷ் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் பிஸியா இருக்கிறார். ராயன் படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் முடிந்து இருக்கும் நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் கடைசிக் கட்டத்தினை நெருங்கி விட்டது. இதனால் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் தொடங்கி விட்டதாம்.
இதையும் படிங்க: தமிழில் வெளிவந்த கல்ட் கிளாசிக் திரைப்படங்கள்!. காலம் கடந்து பேசப்படும் குணா!…
இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாகவும், அனைகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறதாம். இதில் ஒரு பாடலை தனுஷே எழுதி இருக்கிறாராம். அந்த பாடலில் ஜிவிபிரகாஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.