Categories: latest news

தனுஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷா? அந்த படத்தில் நடக்க இருக்கும் சூப்பர் ட்விஸ்ட்…

Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பு ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், இயக்கத்திலும் செம கவனமாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு அதீத எதிர்பார்ப்பும் இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கிட்டத்தட்ட படம் மிகப்பெரிய நஷ்டத்தினையே சந்தித்தது. இப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.

இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலக கமல்தான் காரணமா? வெளியான ஷாக் தகவல்

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜூனா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். 

இது ஒருபுறமிருக்க தனுஷ் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் பிஸியா இருக்கிறார். ராயன் படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் முடிந்து இருக்கும் நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் கடைசிக் கட்டத்தினை நெருங்கி விட்டது. இதனால் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும் தொடங்கி விட்டதாம்.

இதையும் படிங்க: தமிழில் வெளிவந்த கல்ட் கிளாசிக் திரைப்படங்கள்!. காலம் கடந்து பேசப்படும் குணா!…

இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாகவும், அனைகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறதாம். இதில் ஒரு பாடலை தனுஷே எழுதி இருக்கிறாராம். அந்த பாடலில் ஜிவிபிரகாஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

5 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

5 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

5 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

8 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

10 hours ago