ஒரு பக்கம் இசையமைப்பாளராக பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், டைம் கிடைக்கும்போது கதாநாயகனாகவும் நடித்து ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் லேட்டஸ்ட் படம் தான் ‘இம்மார்டல்’ (Immortal). ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் ஜானர் படமான இது இன்று (செப்டம்பர் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இதை புதுமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக ‘டிராகன், இதயம் முரளி’ படங்கள் மூலம் ஃபேமஸான கயாடு லோஹர் தான் நடித்திருக்கிறார்.
மேலும், டி.எம்.கார்த்திக், மாறன், ஆதித்யா கதிர், குமார் நடராஜன் முக்கிய கேரக்டர்களில் வலம் வந்துள்ளனர். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.







