சோலோவா வந்தாலும் சாதிக்காத ரெபல்!.. மமிதா பைஜு சம்பளத்துக்கு கூட முதல் நாள் வசூல் வரலையேப்பா!..

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாள படங்கள் ஓடும் நிலையில், மலையாள நடிகை மமிதா பைஜு நடிப்பில் உருவாகி உள்ள மலையாளிகள் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி உள்ள ரெபல் திரைப்படம் வெற்றியடையுமா? என எதிர்பார்த்தால் அந்த படமும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த வாரம் வந்த ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படத்தை விட ஜி.வி. பிரகாஷின் ரெபல் திரைப்படம் குறைவான வசூலை பெற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தவொரு சுவாரஸ்யமும் இன்றி பிரச்சார படமாகவே இந்த ரெபல் உருவாகியிருப்பதாக பலரும் விமர்சித்து படத்தை டோட்டல் டேமேஜ் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ரெபல் படம் கதையாவே தப்பு!.. ஜி.வி. பிரகாஷ் படத்தை பஞ்சர் பண்ண ப்ளூ சட்டை மாறன்!..
படம் வெளியாவதற்கு முன்னதாக பிரபலங்கள் இந்த படத்தை ஆஹோ ஓஹோன்னு புகழ்ந்து தள்ளினாலும் படம் வெளியான பின்னர் ரசிகர்கள் கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று ரெபல் திரைப்படம் வெளியானதே தப்பு என்றும் மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு கூட்டமே வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
முதல் நாளில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆக்ஷன் ஹீரோ அவதாரமெடுத்த ரிபெல் திரைப்படம் வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். மமிதா பைஜுவின் சம்பளமே 40 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் படத்தின் பட்ஜெட் குறைந்த பட்சம் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு இருந்தாலும், அந்த வசூலை இந்த படம் ஈட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
இதையும் படிங்க: தனுஷ் முதல் ஷாலினி வரை!.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை சேப்பாக்கத்தில் கொண்டாடிய பிரபலங்கள்!..