Cinema News
ஜிவி காட்டுல மழையா இருக்கே… அடுத்த படம் இந்த பெரிய ஸ்டாரோட தானாம்!..
GV Prakash: இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையில் அடுத்து உருவாக இருக்கும் படத்தின் அப்டேட் இணையத்தில் கசிந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பாடகராக உள்ளே வந்து இசையமைப்பாளராக வெற்றி கண்டவர் ஜி.வி பிரகாஷ். தொடர்ச்சியாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வந்தவர் சில காலத்தில் நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன், தேசிய விருது திரைப்படமான ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட தனுஷ் திரைப்படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசை இன்றளவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதைத்தொடர்ந்து ஹீரோவாக ஜிவி பிரகாஷ் நடிக்க தொடங்கிய பின்னர் அவர் இசையமைப்பு செய்த படங்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாக இருந்தது. இருந்தும் சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை தொடர்பு பெற்று வந்தது.
ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து ஜி.வி பிரகாஷ் இசையில் மீண்டும் உச்சமடைந்து இருக்கிறார். விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலாம் திரைப்படம் முதலில் ஜிவி பிரகாஷ் இசைக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களுமே ஜி வி பிரகாஷ் இசையில் வெளியானது.
படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே அளவு ரசிகர்கள் பாடலுக்கும் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜிவி பிரகாஷுக்கு மீண்டும் கோலிவுட்டில் மவுஸ் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கை காப்பி அடிக்கணும்.. அப்போதான் வருவேன்.. தனுஷுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்!..
இதைத்தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்திற்கும், வீர தீரசூரன் திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இது மட்டுமல்லாமல் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகி இருக்கிறார்.
அவருக்கு பதில் பின்னணி இசையை ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது அன்பறிவு இயக்கும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தையும் ஜிவி பிரகாஷுக்கு இசையமைக்க இருப்பதாக தகவல்கள் குவிந்து வருகிறது.