கிரிக்கெட் கோட்ச் ஆக மாறும் மணிரத்னம்!… இது வேற லெவலா இருக்கும் போலயே…

by Arun Prasad |   ( Updated:2023-04-25 13:45:47  )
Mani Ratnam
X

Mani Ratnam

மணிரத்னம் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். அவர் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகம் அமோக வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர் விக்னேஷ் கார்த்திக். இவர் “பகல் நிலவு” என்ற சீரீயலில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் “நட்பதிகாரம்”, “குற்றம் நடந்தது என்ன” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதே போல் இவர், “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல”, “திட்டம் இரண்டு” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது “அடியே” என்ற ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கௌரி கிசான் நடிக்கவுள்ளாராம்.

இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால், கதாநாயகன் வேறு ஒரு Parallel Universe-க்கு சென்றுவிடுவாராம். அங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறதாம். அதாவது மணிரத்னம் கிரிகெட் கோட்சாக இருக்கிறாராம். அதே போல் தோனி, பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருக்கிறாராம். இவ்வாறு மிகவும் வித்தியாசமான கதைக்களத்தோடு இத்திரைப்படம் உருவாகவுள்ளதாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாத்திகர்ன்னு சொல்லிட்டு இப்படியெல்லாம் பண்ணலாமா கமல் சார்?… யாரும் அறியாத அரிய தகவல்…

Next Story