அவருக்கு கதையெல்லாம் இனி என்னால முடிஞ்சா தான் பண்ணுவேன்... கௌதம் மேனனையே காண்டாக்கிய தளபதி...

by Akhilan |   ( Updated:2022-11-18 13:36:39  )
அவருக்கு கதையெல்லாம் இனி என்னால முடிஞ்சா தான் பண்ணுவேன்... கௌதம் மேனனையே காண்டாக்கிய தளபதி...
X

vijay gvm

தமிழ் சினிமாவின் டாப் ஹிட் நாயகன் விஜயிற்கு இனி படம் பண்ண வாய்ப்பு வந்தா என் கிட்ட கதை அமைஞ்சா பார்க்கலாம் என கௌதம் மேனன் கூறி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் நடிகராகவும் இருக்கிறார். இவரின் பல படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூலில் சக்கை போடு போட்டது. அதிலும் காதல் கதை அனைத்துமே ஹிட் என்றே கூற வேண்டும்.

GVM

அதிலும், மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் இவரின் திரை வாழ்வில் முக்கிய இடத்தினை பிடித்து இருக்கிறது. இதில் வாரணம் ஆயிரம் படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அடுத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இவரின் இயக்கத்தில் நீண்டகாலமாக கிடப்பில் இருப்பது துருவ நட்சத்திரம் படம். விக்ரம் நடித்திருக்கும் இப்படத்தின் வேளைகளை துவங்க இருக்கிறார் எனவும் கோலிவுட் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர்.

இந்நிலையில், இவரிடம் விஜயை இயக்குவீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதுகுறித்து பதிலளித்த கௌதம், விஜய் பெரிய நடிகர். அவரிடம் இதுவரை மூன்று கதைகளை சொல்லி இருக்கிறேன். எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை. இனி வாய்ப்பு வந்தால் என்னிடம் கதை இருந்தால் தான் செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்.

Next Story