“விக்ரம்” லாபத்தால் இளம் இயக்குனர்களுக்கு வலை வீசும் கமல்… அடுத்து யார் தெரியுமா??
லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. மேலும் உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த மாபெரும் வசூல் சாதனையை முன்னிட்டு கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார்.
மேலும் “விக்ரம்” திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக அளித்தார். அதுமட்டுமல்லாது, ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன், தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் புதிய திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ஹெச்.வினோத் , ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார் எனவும், அத்திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஹெச்.வினோத் தற்போது அஜித்தை வைத்து “துணிவு” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
“துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது கமல்ஹாசனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.