பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்தா நல்ல படங்களா..? தளபதி பட டைரக்டர் என்ன இப்படி சொல்லிட்டாரு...!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த படங்கள் எல்லாம் நல்ல படங்கள் இல்லை என்று இயக்குனர் ஹச் வினோத் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் ஹச் வினோத். மறைந்த நடிகர் மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற தரமான திரைப்படத்தை கொடுத்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்ற மூன்று படங்களை இயக்கினார். கடைசியாக அஜித்துடன் இணைந்து துணிவு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் வசூல் ரீதியாகவும் ஹிட்டு படமாக அமைந்தது. அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து தளபதி 69 திரைப்படத்தை இவர் இயக்க இருக்கின்றார்.
இதற்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. மேலும் படம் தொடர்பான அப்டேட் இன்று வெளியாகும் என்று கூறிவந்த நிலையில் மாலை 5 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ஹெச் வினோத் பேசியிருப்பது வைரலாகி வருகின்றது.
ரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நந்தன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வினோத், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தார்கள்.
மேலும் சசிக்குமாருக்கு ஜோடியாக இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹெச் வினோத் கூறி இருந்ததாவது 'பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் என்று கூறி விட முடியாது. எது நல்ல படம் என்று நான் கூறுவேன் என்றால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்களோ பெரிய ஹீரோ நடிக்கும் படங்களோ கிடையாது.
ஒரு மனிதனை சிறந்த மனிதனாக மாற்றக்கூடிய அல்லது மாற்ற முயற்சி செய்யக் கூடிய படங்கள் தான் சிறந்த படங்கள் என்று நான் கூறுவேன்' என்று தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்பட்டு வருபவர் விஜய். இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர் ஹெச் வினோத் இப்படி ஒரு கருத்தை கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.