சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். ஈமு கோழி, மல்டி வெவல் மார்க்கெட்டிங், பாதி விலைக்கு தங்கம், மண்ணுளி பாம்பு, இரிடியம் என மக்களை ஏமாற்றும் பல மோசடிகளை வைத்து சுவாரஸ்யமாக திரைக்கதை எழுதியிருந்தார்.
அதன்பின் கார்த்தியை வைத்து அவர் எடுத்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வடமாநிலத்திலிருந்து தமிழகம் வந்து எப்படி கொள்ளையடிக்கிறார்கள்?.. அவர்களின் சரித்திரம் என்ன? என எல்லாவற்றையும் விபரமாக காட்டியிருந்தார். இந்த படத்திலேயே அவர் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை காட்டிவிட்டர்.

அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். இது எல்லாம் ஹீரோவை மையமாக வைத்து உருவான படங்கள். அடுத்து கமலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். குறுகிய பட்ஜெட்டில் 35 நாட்களில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க: அந்த மாதிரி எந்த ஹீரோவும் செய்யமாட்டான்!.. இம்பாசிபிள்!. கமலை பாராட்டி தள்ளிய பாரதிராஜா…

இந்த படத்தில் தமிழகத்தின் பாரம்பரிய் நெல் விதைகள், அதில் பல விதைகள் எப்படி அழிந்துபோனது, அதற்கு பின்னணியில் இருப்பது யார் என எல்லாவற்றையும் காட்டவுள்ளாரம். அதோடு, கிளைக்கதையாக இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும் தெளிவாக காட்டவுள்ளாராம்.
இந்த கதையில் கமலின் பங்களிப்பும் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் கூட நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பின் நிர்வாகிகளை கமல் நேரில் வரவழைத்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக்பாஸுக்கு போனால் இந்த நிலைமைதான்! ராஜு இப்போ என்ன பண்ணிட்டுகிட்டு இருக்காருனு தெரியுமா?
