எச்.வினோத் அதுல உறுதியா இருக்காரு! விஜய்க்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்
Thalapathy 69: எப்படியோ விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல கோட் திரைப்படம் வெற்றிவாகை சூடி வருகிறது. வசூலிலும் பெரிய சாதனை படைத்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்களில் 300 கோடி கிளப்பிலும் கோட் திரைப்படம் இணைந்து இருக்கிறது.
இதற்கு முன் விஜயின் பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய திரைப்படங்களும் ஐந்து நாட்களில் 300 கோடி கலெக்ஷனை அள்ளியது. அந்தப் படங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் விஜய் நடித்த கோட் திரைப்படமும் அதே மாதிரியான வசூலை அள்ளி இருக்கிறது. ஆக மொத்தம் தமிழ் சினிமாவின் ஒரு வசூல் சக்கரவர்த்தி விஜய் தான் என மீண்டும் இந்த திரைப்படத்தின் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறார் தளபதி.
இதையும் படிங்க: போடு அஜித்துடன் மோதும் கமல்! சூர்யா மாதிரி பின்வாங்குறதா இல்ல.. போட்டிக்கு ரெடி
வெங்கட் பிரபுவின் ஸ்கிரீன் ப்ளே இந்த படத்திற்கு நல்லபடியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மாநாடு திரைப்படத்தை எப்படி விறுவிறுப்பாக கொண்டு சென்றாரோ அதேபோல கோட் திரைப்படத்தையும் விறுவிறுப்பாக கொண்டு சென்று படத்தின் நீளத்தை பெரிதாக காட்டாமல் நகர்த்தி இருக்கிறார் வெங்கட் பிரபு.
இன்றுவரை திரையரங்குகளில் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்க முடிகிறது. இப்படி கோட் திரைப்படத்தை ஒரு பக்கம் கொண்டாடி வந்தாலும் அடுத்ததாக விஜயின் நடிப்பில் கடைசியாக உருவாகும் திரைப்படம் அவருடைய 69 வது திரைப்படம் .
இதையும் படிங்க: நான் சி.எஸ்.கே ரசிகன்!.. கோட் படம் ஓடனலனா நான் ஒன்னும் பண்ண முடியாது!.. பொங்கிய விபி!…
அதைப்பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் ஆரம்பத்தில் இருந்து அந்த படத்தை எச் வினோத்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு பேச்சு அடிபட்டு கொண்டே வருகின்றது. கோடம்பாக்கத்திலும் 99% வினோத்தான் படத்தை இயக்கப் போகிறார் என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் அரசியலில் முழுமூச்சாக இறங்கிய பிறகு அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாக அவருடைய 69 ஆவது திரைப்படம் அமையப்போகிறது. அதனால் கண்டிப்பாக அரசியல் சார்ந்த ஒரு தாக்கம் அந்த படத்தில் இருந்தால் ரசிகர்களுக்கும் விஜயின் தொண்டர்களுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: நான் சி.எஸ்.கே ரசிகன்!.. கோட் படம் ஓடனலனா நான் ஒன்னும் பண்ண முடியாது!.. பொங்கிய விபி!…
அதற்கேற்றார் போல எச் வினோத்தும் அவர் எடுத்த படங்களில் எப்படியாவது அரசியல் கருத்தை சொல்லாமல் விட்டதும் இல்லை. அதனால் கண்டிப்பாக இந்த படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து துணிவு படத்தை கொடுத்த எச் வினோத் அப்போதைய பேட்டிகளிலேயே விஜயை வைத்து ஒரு பொலிட்டிக்கல் கதையைத்தான் நான் உருவாக்குவேன்.
அவரிடம் பல கதைகளை சொல்லி இருக்கிறேன். அந்த கதைகளில் எல்லாமே பொலிட்டிக்கல் தாக்கம் இருக்கிறது .அதனால் கூடிய சீக்கிரம் பார்ப்போம் என அப்பவே சொல்லியிருந்தார் எச் வினோத். அந்த ஒரு பேட்டி தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மங்காத்தா படத்தில் அஜித் இல்லை!.. அது நான் பண்ன வேண்டிய படம்!.. புலம்பும் நடிகர்!…
அதனால் விஜய்யை வைத்து பொலிட்டிக்கல் கதையை எடுப்பதில் உறுதியாக இருக்கிறார் எச் வினோத். அதனால் கண்டிப்பாக விஜய்க்கு அவருடைய கடைசி படம் ஒரு பவர்ஃபுல்லான படமும் அரசியலில் எப்படி ஒரு பெரிய ஆளுமையாக மாற வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் தொண்டர்களுக்கு காட்டுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரசியலில் தான் என்னெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை ஒரு சேம்பிளாக இந்தப் படத்தின் மூலம் சொல்லி அடிப்பார் விஜய் என்றே தெரிகிறது.