அடடே.. நம்ம ஹன்ஷிகாவா இது.. மஞ்சள் உடையில் மங்களகரமாக இருக்காங்க!!

Published On: November 16, 2021
hansika
---Advertisement---

தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்ஷிகா. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். கொழுக் மொழுக் என பப்ளியாக இருந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவே தமிழில் முன்னணி நடிகையானார்.

hansika
hansika

தமிழில் அறிமுகமாகும் முன்பே இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார். தமிழில் விஜய், தனுஷ், சிம்பு என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்த அவர் ஜோதிகா, நயன்தாரா போன்று ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இவர் சரியான படங்களை தேர்வு செய்யாததால் இவரது மார்க்கெட் சரியாடத்தொடங்கியது. கடைசியாக தமிழில் அதர்வாவுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே சென்றதால் பட வாய்ப்புகளை இழந்தார்.

hansika
hansika

இதையடுத்து இரண்டாம் தர நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு இறங்கி வந்தார். தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள இவர் எப்படியாவது படவாய்ப்பை கைப்பற்றிவிடவேண்டும் என்ற முயற்சியில் சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான படங்களை பதிவேற்றி வருகிறார்.

hansika
hansika

இதன் விளைவாக தற்சமயம் இவர் கைவசம் தமிழில் 2, தெலுங்கில் 2 படங்கள் உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் தனது பிகினி படத்தை பதிவேற்றியிருந்த இவர் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மஞ்சள் நிறத்தில் உடலை முழுவதும் கவர் செய்யும் வகையில் உடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் சற்று ஒல்லியாக இருந்தாலும் அழகாக தெரிகிறார். இந்த படத்தில் ஹன்ஷிகா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment