Connect with us

Cinema News

31 குழந்தைங்களுக்கு நான் அம்மா!.. கல்யாணத்துக்கு பிறகும் நான் மாறல!.. ஹன்சிகா ஓப்பன் பேட்டி!..

கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையில் படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. அவரது ஆழ்மனதில் சென்று யாரோ பேய் படங்கள் தான் இனிமேல் உங்களுக்கு செட்டாகும் என சொல்லி விட்டார்கள் என்று தெரியவில்லை தொடர்ந்து பேய் படங்களாக நடித்துத் தள்ளுகிறார்.

அரண்மனை ஒன்று மட்டும் இரண்டில் நடித்த ஹன்சிகா மஹா, ரவுடி பேபி போன்றபடங்களிலும் நடித்துள்ளார். அடுத்து அவர் நடித்துள்ள கார்டியன் திரைப்படம் வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

இதையும் படிங்க: இதுக்கு நீங்க போஸ்டரே விட்ருக்கலாம் வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட்டில் கோட்டை விட்டுட்டாரே!..

சிம்புவின் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சபரி மற்றும் குரு சரவணன் என இரு இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

அந்தப் படத்திற்கான புரோமோஷன் வேலைகளை நடிகை ஹன்சிகா ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிறுவயதில் என்னுடைய அம்மா என் பிறந்தநாளுக்கு குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆதரவற்ற குழந்தைகளை பார்த்தபோது மிகவும் வருந்தினேன். நடிகையாக மாறி சம்பாதித்த பிறகு குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வருகிறேன். இதுவரை எனக்கு 31 குழந்தைகள் உள்ளனர் என்றார்.

இதையும் படிங்க: அடுத்த தளபதி நான் தான்!.. 70 லட்சம் பேர் என் பாக்கெட்டுல!.. கெத்துக்காட்டிய சிவகார்த்திகேயன்!..

திருமணத்திற்கு பிறகு என் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறேன் எனது குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். கார்டியன் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் என்றார்.

விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் ரொம்பவே சென்சிபிலான நபர் அவர் ஒரு முடிவு எடுத்தால் சரியாக இருக்கும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறினார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினுடன் மரக்கன்றுகள் நட ஆசைப்படுகிறேன் என்றும் பார்ட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் ஜெயம் ரவி தான் சரியான ஆள் என்றும் ஹன்சிகா மோத்வானி பளிச்சென பேசியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top