அடுத்த தளபதி நான் தான்!.. 70 லட்சம் பேர் என் பாக்கெட்டுல!.. கெத்துக்காட்டிய சிவகார்த்திகேயன்!..

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

அந்தப் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டலான ஒரு படத்தில் நடித்து வருகிறார். கோலிவட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமே சிவகார்த்திகேயன் தான் என்றும் அடுத்த தளபதி இவர்தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்பைடர்மேன் படத்துல நடிக்கப்போறாரா ஜோதிகா?.. என்னம்மா தாவுறாரு!.. வேறலெவல்ங்க நீங்க!..

பெரிய ஸ்டார் ஆக வேண்டுமென்றால், மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது முக்கியம். இன்ஸ்டாகிராமில் நடிகைகள் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரிப்பது வழக்கம். ஆனால் ஒரு ஹீரோவுக்கு ஃபாலோயர்கள் எந்தளவுக்கு இருக்கிறார்களோ அவர்கள் அனைவருமே அந்த நடிகரின் ரசிகர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் இதுவரை 338 போஸ்ட்டுகளை பதிவிட்டு 7 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார். அதாவது 70 லட்சம் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் நடிகர் சிவகார்த்திகேயனை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த பாட்டை எழுதினது வைரமுத்து இல்ல!.. ஏ.ஆர்.ரஹ்மானாம்!.. என்னப்பா சொல்றீங்க!…

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கிய நடிகர் விஜய் 10.7 மில்லியன் ரசிகர்களை கொண்டு மாஸ் காட்டி வருகிறார். கூடிய விரைவிலேயே சிவகார்த்திகேயன் 10 மில்லியன் ரசிகர்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படம் பெரிதாக வசூல் ஈட்டாமல் ரிலீஸ் ஆனதே போதும் என்கிற நிலையில் உள்ளது. அமரன் படம் ரெடியாக இருந்தாலும், தேர்தல் முடிந்த பின்னர் தான் வெளியாகும் என தெரிகிறது.

தேர்தலுக்குப் பின்னர் பல பெரிய படங்கள் போட்டிப் போட்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரிய கிளாஷ் ஏற்படும் என தெரிகிறது.

 

Related Articles

Next Story