Jailer 2: மோகன்லால் நடிச்ச நிறைய சீனை தூக்கிட்டாங்க!.. கோபத்தில் சேட்டன்ஸ்…

X
Jailer 2: மோகன்லால் நடிச்ச நிறைய சீனை தூக்கிட்டாங்க!.. கோபத்தில் சேட்டன்ஸ்…

மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முதல் 100 கோடியை வசூலித்த முதல் திரைப்படம் மோகன்லாலின் புலி முருகன் திரைப்படம்தான்.
தொடர்ந்து லூசிபர் உள்ளிட்ட பல வெற்றிப் டங்களை கொடுத்தவர் இவர்.

இன்னும் சொல்லப்போனால் மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் மோகன்லால்தான். ரஜினியின் மீதுள்ள மரியாதையின் காரணமாக நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்த ஜெயிலர் படத்தில் மோகன்லால் ஒரு சிறிய கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடுத்து நல்ல வசூலை பெற்றதால் ஜெயிலர் 2 படம் உருவானது/. அந்த படத்தில் சில காட்சிகளில் வரும் கேமியோ வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

ஆனால், ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் நடித்த முக்கியமான சில காட்சிகளை இயக்குனர் நெல்சன் வெட்டிவிட்டதாக மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிசாத் சம்சுதீன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் சாரின் 3 தனித்துவமான தோற்றங்கள் முழுமையாக நீக்கப்பட்டன. டிரெய்லரில் இடம்பெற்ற இரண்டு வினாடி காட்சிகளும் படத்தில் வெட்டப்பட்டது. மோகன்லால் சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் இடம்பெறும் காட்சிகளை வெட்டி சுருக்குவது தேவையற்றது’ என பதிவிட்டிருக்கிறார்….