திடீரென ஜெயிலரை சந்தித்த இன்பநிதி!.. அடுத்து ரஜினி – கமல் படமா?….

X
திடீரென ஜெயிலரை சந்தித்த இன்பநிதி!.. அடுத்து ரஜினி – கமல் படமா?….

ரஜினியும் கமலும் 50 வருட கால நண்பர்கள். ரஜினி நடித்த முதல் படத்திலேயே கமல்தான் ஹீரோ. அதன்பின் கமல் ஹீரோவாக நடித்த படங்களில் தொடர்ந்து அவரின் நண்பராக ரஜினி நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக பிரிந்து ஹீரோக்களாக நடிக்க தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் வசூலை குவிக்கும் திரைப்படங்களை கொடுத்து ரஜினி சூப்பர் ஸ்டாராக மாறினார். மேலும், நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து நேற்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.125 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.66 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் படம் நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மகன் இன்பநிதி திடீரென ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். இன்பநிதி தயாரிக்க, நெல்சன் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி அது தொடர்பாக வீடியோவையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

தற்போது ஜெயிலர் 2 சூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிலையில் இன்பநிதி ரஜினியை சந்தித்து பேசியிருப்பதால் அடுத்து ரஜினி, கமல் இணையும் படம் உருவாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது..