பார்த்திபனுக்கே போட்டியா மாறிய ஹன்சிகா!.. உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம்.. 105 மினிட்ஸ் டிரெய்லர்!
ஹன்சிகா ஹீரோயினாக நடித்த காலத்திலேயே பல படங்கள் ஓடவில்லை. அதன் பின்னர் சோலோ ஹீரோயினாக மாறிய பின்னர் அவர் நடித்த மஹா உள்ளிட்ட படங்களும் மண்ணை கவ்வின. ஆனால், தனது முயற்சியை விட்டு விடாமல் திருமணத்துக்குப் பிறகும் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்.
இதற்கு முன் எந்தவொரு ஹீரோயினும் ரிஸ்க் எடுக்காத அளவுக்கு வித்தியாசமாக உலகின் முதல் சிங்கிள் ஷாட் மற்றும் சிங்கிள் கேரக்டர் படமாக இந்த 105 மினிட்ஸ் படம் உருவாகி இருக்கிறது. அதில், முழுக்க முழுக்க 105 நிமிடங்களும் ஹன்சிகாவை மட்டுமே ரசிகர்கள் கண்டு ரசிக்கப் போகின்றனர். ஆனால், இந்த முறை கவர்ச்சி தரிசனம் எல்லாம் இல்லை. லாக்கப் ரூமில் மாட்டிக் கொள்ளும் ஹன்சிகா அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா என்கிற கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படத்தை தான் விரைவில் வெளியிட உள்ளார். அதன் த்ரில்லிங்கான டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..
பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த படத்தை ராஜு துஷா என்பவர் இயக்கி இருக்கிறார். சாதாரண அறை முதல் தண்ணீர் சூழ்ந்த அக்வாரியம் செட் வரை ஒரே இடத்தில் போடப்பட்டு சிங்கிள் ஷாட் படமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.
பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் சிங்கிள் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருந்தார். இரவின் நிழல் படத்தை சிங்கிள் டேக் படமாக இயக்கி நடித்திருந்தார். இந்நிலையில், அந்த ரெண்டு படத்துக்கும் ஒரே படத்தில் டஃப் கொடுக்கும் விதமாக ஹன்சிகா நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. வரும் ஜனவரி 26ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படமாவது அவருக்கு ஓடினால் நல்லா இருக்கும்.
இதையும் படிங்க: நீங்க ரொம்ப சப்பை ஃபிகரு!.. கோட் ஹீரோயினை அந்த ஹீரோ படத்துல பார்த்து ஹார்ட் அட்டாக் வந்துடுச்சே!
COPYRIGHT 2024
Powered By Blinkcms