இந்த ஹரி படத்தில் கமல்ஹாசன்தான் நடிக்க வேண்டியது-ஜஸ்ட் மிஸ்… இது புதுசா இருக்கே!
ஹரி தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றி இயக்குனராக திகழ்ந்து வருபவர். இவரது திரைப்படங்கள் அனைத்திலும் திரைக்கதை ஜெட் வேகத்தில் செல்லும். அதனை விட அவரது திரைப்படத்தின் கேமரா ராக்கெட் வேகத்தில் செல்லும். அந்தளவுக்கு பார்வையாளர்களை பரபரப்பாகவே வைத்திருப்பார் ஹரி.
ஹரி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “தமிழ்”. இத்திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் விக்ரமை வைத்து “சாமி” என்ற மாஸ் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். அதன் பின் ஹரி தொட்டதெல்லாம் வெற்றியாகியது. இந்த நிலையில் ஹரி கமல்ஹாசனுக்கு ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை கமல்ஹாசனுக்கு பிடிக்காமல் போக, வேறு ஒரு நடிகர் அந்த படத்தில் நடித்து அந்த படம் மாஸ் ஹிட் ஆனது. அந்த நிகழ்வை குறித்து இப்போது பார்க்கலாம்.
சென்னையில் ஒரு பெட்ரோல் பங்க் முதலாளியாக இருந்த ஞானவேல் என்பவர் சினிமா தயாரிப்பில் ஈடுபாடோடு இருந்தார். அப்போதுதான் இயக்குனர் ஹரி, “தமிழ்” திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து ஞானவேலிடம் வந்த ஹரி, “நான் ஒரு அற்புதமான கதை வைத்திருக்கிறேன்” என ஒரு அட்டகாசமான கதையை கூறினாராம்.
அந்த கதை ஞானவேலுக்கு பிடித்துப்போக, “இந்த படத்தை நான் தயாரிக்கிறேன். யார் நடித்தால் நன்றாக இருக்கும்” என கேட்டிருக்கிறார். அதற்கு ஹரி, “கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும்:” என கூற, உடனே சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கமல்ஹாசனிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி ஹரியை கதை சொல்ல அனுப்பியிருக்கிறார். கதை கேட்ட கமல்ஹாசன், “எனக்கு இந்த கதை அவ்வளவாக செட் ஆகாது” என கூறி அதில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன் பின் ஹரி, பல திரைப்படங்களை இயக்கிய பிறகு, கமல்ஹாசனிடம் கூறிய அந்த கதையை சரத்குமாரிடம் கூறி ஓகே வாங்கியிருக்கிறார். அந்த திரைப்படம்தான் “ஐயா”. இத்திரைப்படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் நடித்த மறுத்த இரண்டு திரைப்படங்கள் -அதற்கு அவரே சொன்ன காரணம் இதுதான்