More
Categories: Cinema News latest news

என்னோட மற்ற படங்கள் மாதிரி ரத்னம் படத்துல அந்த விஷயம் இருக்காது!.. ரசிகர்களை ஏமாற்றி விட்டாரே ஹரி!..

கடந்த 2002 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான தமிழ் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அடுத்த ஆண்டு சீயான் விக்ரமை வைத்து அவர் இயக்கிய சாமி திரைப்படம் தான் மெகா பிளாக்பஸ்டர் படமாக அவருக்கு மாறியது.

சாமி படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து கோவில், சியான் விக்ரமை வைத்து அருள் படங்களை இ யக்கினார். அந்த இரண்டு படங்களும் சுமாரன வெற்றியை பெற்றன. சரத்குமார், நயன்தாரா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மீண்டும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ஆறு படம் வெளியானது. விஷால் நடித்த தாமிரபரணி, சூர்யா நடித்த வேல், சிங்கம் 1,2 மற்றும் 3 படங்கள் ஹரிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு!.. கங்குவா ஹீரோயின் டிரெஸ் போட்டுத்தான் இருக்காரான்னு டவுட்டே வருதே!

பூஜை மற்றும் சாமி ஸ்கொயர் படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு யானை படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும்விஷாலை வைத்து ரத்னம் படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால் அனைவரும் சரியான நபரை தேர்வு செய்து தங்களின் ஓட்டுக்களை மறக்காமல் போட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த விழாவில் பேசிய இயக்குனர் ஹரி சமீபகாலமாக தனது படங்கள் தோல்வியை தழுவுகின்றன என்பதை அறிய மக்களிடம் பேசினேன். அவர்கள் பொதுவாக கொடுத்த ஆலோசனை என்னவென்றால் எனது படங்களில் வரும் வேகமான எடிட்டிங் படத்திற்கு மைனஸாக உள்ளது என்றனர்.

இதையும் படிங்க: கலெக்‌ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..

அதனால் ரத்னம் படத்தில் வேகமான எடிட்டிங்கை குறைத்துவிட்டு ரியாலிடியான சண்டைக் காட்சிகளை அதிகம் வைத்து பரபரப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது ஹாலிவுட் படங்களில் வருவது போல ஒரு லென்த் ஆன 5 நிமிட எந்த ஒரு கட்டும் இல்லாத சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. அதற்கு இசையமைக்கவே சவாலாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இருந்தாலும் தளபதிக்கு குசும்புதான்! இன்விட்டேஷன் வச்ச பாண்டியம்மாவிடம் வம்பிழுத்த விஜய்

Published by
Saranya M

Recent Posts