படையப்பா ஊஞ்சல் சீனுக்கு மியூசிக் போட்டது ரஹ்மான் இல்ல!.. கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி…

படையப்பா பற்றி கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த பேட்டி..

padayappa

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சௌமியா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், அப்பாஸ் லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்து 1999ம் வருடம் வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு படமும் சூப்பர் ஹிட் அடித்தது..

கூட்டம் கூட்டமாக பெண்கள் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்த்து வரவேற்பு கொடுத்தனர். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ரஜினிகாந்த் ஒரு கோடி சம்பளம் கொடுத்தார். சிவாஜி கணேசன் தனது திரை வாழ்வில் வாங்கிய அதிக சம்பளம் இதுதான் என சொல்லப்படுகிறது.

படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இப்போது கூட பல நடிகைகளும் பேட்டி கொடுக்கும் போது ‘படையப்பா நீலாம்பரி போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசை’ என சொல்கிறார்கள்..

அந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தை கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கியிருந்தார். ரம்யா கிருஷ்ணனும் நீலாம்பரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல், படத்தில் இடம் பெற்ற ஊஞ்சல் காட்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அதாவது நீலாம்பரி வீட்டுக்கு ரஜினி வருவார்..

பலவருடங்கள் கழித்து படையப்பாவும், நீலாம்பரியும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் காட்சி அது. ரஜினியை பார்த்ததும் கால் மேல் கால் போட்டு உட்காருவார் ரம்யா கிருஷ்ணன். ரஜினி அமர அங்கே ஒரு சேர் கூட இருக்காது.. உடனே துண்டை எடுத்து மேலே உள்ள ஊஞ்சலை பிடித்து இழுத்து அதன்மீது ஸ்டைலாக உட்காருவார் ரஜினி.. இந்த காட்சி ரஜினி ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்றது..

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் இந்த காட்சி பற்றிய ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். படையப்பா படத்துக்காக எல்லா காட்சிகளுக்கும் ரகுமான் பின்னணி இசை அமைத்துக் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த ஊஞ்சல் காட்சிக்கு என்ன மாதிரியான பின்னணி இசையை கொடுப்பது என அவருக்கு ஐடியா வரவில்லை. இதுக்கு என்ன போடுவது என்று எனக்கு தெரியவில்லை சார் என்று சொல்லிவிட்டார்..

haris

அவர் சென்ற பிறகு அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த ஹரீஸ் ஜெயராஜ் ‘சார் நாம ஏதாவது முயற்சி பண்ணி பார்க்கலாமா?’ என்று கேட்டார். எல்லா காட்சிகளையும் பார்த்துவிட்டு ஊஞ்சல் காட்சிக்கு படத்தின் டைட்டிலில் வரும் பின்னணி இசையை போட்டு விடலாம் என்று சொன்னார்.. அதே மாதிரி இசை தேவைப்படுகிற எல்லா காட்சிகளையும் ஃபில் அப் பண்ணினோம்..

ரகுமான் சார் வந்ததும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ‘அவ்வளவுதான் சார்.. படம் முடிஞ்சிடுச்சு சார்’ என்று சொல்லி குழந்தை மாதிரி கைதட்டினார்’ என கூறியிருக்கிறார்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →