More
Categories: Cinema News latest news

சும்மா பரபரக்குதே!.. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் எல்லாம் ஓரம் போங்கப்பா.. பார்க்கிங் பட சீனை பார்த்தீங்களா?

இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அண்ணன் வாங்கிய நகைக்கு எழுதி தங்கை போட்ட கூப்பனுக்கு பரிசாக கார் விழுந்திருக்கும். அந்த காருக்கு அண்ணனும் தங்கையும் போட்டி போடுவதை வித்தியாசமாக படமாக்கி இருப்பார்கள்.

மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை காரை வைத்து அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பாகுபலியை போட்டு பொளக்க ரெடியாகிட்டாரா சூர்யா!.. கங்குவா படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!..

தோனி தயாரிப்பில் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த எல்ஜிஎம் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், இந்த பார்க்கிங் படத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எல்லாம் சென்று ப்ரொமோஷன் செய்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக சமீபத்தில் இந்த படம் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை பெற்றது. டிசம்பர் ஒன்றாம் தேதி அனிமல், நயன்தாராவின் அன்னபூரணி உள்ளிட்ட படங்களுடன் பார்க்கிங் படமும் மோதத் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைங்கடா!.. ஓப்பனா விட்டு மொத்த அழகையும் காட்டும் தமன்னா..

ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹரிஷ் கல்யாணத்துக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே நடக்கும் பார்க்கிங் பிரச்சனைதான் இந்தப் படத்தின் கதையே.

இந்நிலையில், தற்போது அந்த படத்தின் மிக முக்கியமான பார்க்கிங் காட்சி தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. அலுவலகத்தில் இருந்து எம்எஸ் பாஸ்கர் மற்றும் ஐடி ஆபிஸிலிருந்து ஹரிஷ் கல்யாண் ஒரே நேரத்தில் வீட்டுக்கு கிளம்பி, யார் முதலில் அந்த பார்க்கிங் எதைப் பிடிக்கப் போவது என்கிற அளவுக்கு நடக்கும் ரேஸ் காட்சி கடைசிவரை த்ரில்லிங் அனுபவத்தை தரமாக கொடுத்துள்ளது.

கவினுக்கு இந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் வெற்றியை கொடுத்தது போல ஹரிஷ் கல்யாணுக்கு கொடுக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

 

Published by
Saranya M

Recent Posts