பாகுபலியை போட்டு பொளக்க ரெடியாகிட்டாரா சூர்யா!.. கங்குவா படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!..
தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற வில்லன்கள் கதாபாத்திரம் காலகேயர்கள் எனும் காட்டுமிராண்டிகளாக காட்டப்பட்டது தான் என்கின்றனர்.
இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா திரைப்படம் பாகுபலி படத்தை விட மிரட்டலான திரைக்கதை மற்றும் மேக்கிங் உடன் உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: இப்படி பண்றீங்களேம்மா!.. லோகேஷோட தேள் கொடுக்கு தயாரிப்புல அடுத்த ஹாலிவுட் ஃபர்னிச்சர் உடையப் போகுதா?..
ஆரம்பத்தில், கங்குவா படம் பாகுபலி போல இருக்காது என்றும் ராஜமௌலி இயக்கிய மகதீரா பாணி திரைப்படம்தான் என எதிர்பார்க்கப்பட்டது. பீரியட் போர்ஷன் வெறும் பெயரளவுக்குத்தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், நடிகர் சூர்யா படத்தை இரண்டு பாகங்களாக கூட எடுக்கலாம் நிறைய பீரியட் போர்ஷனை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது அதிகபட்சமாக 70% பீரியட் போர்ஷன் மற்றும் 30% தான் நிகழ்கால காட்சிகள் இருக்கும் என்கிற சூடான அப்டேட் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: அந்த விஷயத்தை செய்யப் போறேன்!.. யாராவது வந்து கையை புடிச்சிக்கிறீங்களா.. மாளவிகா மோகனனா இப்படி சொல்றாரு?
அடுத்த மாதம் இறுதிக்குள் கங்குவா படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 3d மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் இந்த படம் உருவாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு சம்மருக்கு தமிழ் சினிமாவில் இருந்து தரமான சம்பவம் காத்திருக்கிறது எனக் கூறுகின்றனர்.