பிரபல நட்சத்திர ஜோடியின் திருமண ரிசப்ஷன்!.. கெத்தா என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. வைரல் வீடியொ!..

by Saranya M |   ( Updated:2023-09-17 10:16:25  )
பிரபல நட்சத்திர ஜோடியின் திருமண ரிசப்ஷன்!.. கெத்தா என்ட்ரி கொடுத்த இளம் நடிகர்.. வைரல் வீடியொ!..
X

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியனின் திருமணம் சமீபத்தில் திருநெல்வேலியில் பசுமை திருமணமாக இயற்கை சூழ நடைபெற்ற நிலையில், அதில் பல சினிமா பிரபலங்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சினிமா பிரபலங்களுக்காக சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ரிஷப்ஷனில் நடிகர்கள் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

சிகப்பு தான் அழகு என்பது தவறான சித்தாந்தம் என சமீபத்தில் ஒரு தொகுப்பாளினியை டோட்டல் டேமேஜ் செய்திருந்த அசோக் செல்வன் கருப்பழகியான கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்துள்ளார். பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியாள், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: லால் சலாம் டப்பிங்கை தாறுமாறா முடித்த ரஜினிகாந்த்!.. அதில் அவர் சொல்ற வசனத்தை கேட்டீங்களா?..

பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் இன்னமும் ரிலீஸ் ஆகாத நிலையில், அந்த படத்தில் கருப்பு மேக்கப் போட்டு நடித்துள்ள அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்த நிலையில், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் காரணமாக அதி விரைவாக திருமணத்தை செய்து கொண்டனர்.

பிக் பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் தங்கையான கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் உள்ளாடையுடன் எல்லாம் போஸ் கொடுத்து வந்த நிலையில், அசோக் செல்வனுக்கு புரபோஸ் செய்ய அவரும் ஓகே சொல்ல இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: இருந்தாலும் இவ்ளோ நல்லவரா இருக்காரே ஷாருக்கான்!.. ஜவான் இன்னும் அந்த மைல் கல்லை தொடலையாம்!..

சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் அழகிய பூங்கொத்துடன் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், பல திரையுலக பிரபலங்களும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், கூடிய சீக்கிரமே ஏகப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகும் என தெரிகிறது.

Next Story