சின்ன பட்ஜெட்டில் ரசிக்க வைக்கும் பார்க்கிங்.. என்ன சொல்கிறது ரிப்போர்ட்?..

by Akhilan |   ( Updated:2023-12-01 06:21:40  )
சின்ன பட்ஜெட்டில் ரசிக்க வைக்கும் பார்க்கிங்.. என்ன சொல்கிறது ரிப்போர்ட்?..
X

Parking movie: தமிழ் சினிமா இந்த வருடத்தில் நிறைய சின்ன பட்ஜெட் படங்களில் வெற்றி கண்டு இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் சமீபத்திய இணைப்பாக பார்க்கிங்கும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த வருட தொடக்கத்தில் இருந்தே லவ் டுடே, குட் நைட், போர் தொழில், டாடா உள்ளிட்ட சின்ன பட்ஜெட் படங்கள் கதைக்காக ஹிட் அடித்தது. அந்த வரிசையில் பார்க்கிங் படமும் சூப்பர் விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: அனிமல் விமர்சனம்: ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு!.. அதை மட்டும் சரி செஞ்சிருக்கலாம் சந்தீப் ரெட்டி!

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார்கள் ஹரிஷ் மற்றும் பாஸ்கர். இதில் ஹரிஷ் புதிதாக வாங்கும் காரால் பல வருடமாக கார் வைத்து இருக்கும் பாஸ்கருடன் பிரச்னை ஏற்படுகிறது. இந்த கார் பார்க்கிங்காக நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இப்படம் இன்று (டிசம்பர்1) திரைக்கு வந்து இருக்கிறது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சரியாக செய்து இருக்கின்றனர். இயக்குனர் கதையை வைத்து விளையாடி இருக்கிறார். இதனால் இன்னொரு புதுமுக வெற்றி இயக்குனராக ராம்குமாருக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் ஹிட்டுக்கு பின் நெல்சன் ப்ளான் இதுதானா? ஆனா கோலிவுட் இல்லையாம்.. என்ன ஜி இப்படி?

Next Story