பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் அந்த ஹேண்ட்ஸம் ஹீரோ!.. யாருன்னு பார்க்கலாமா?..
அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் மீசை கூட முளைக்காத இளைஞராக அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் நடித்து வந்தாலும் எந்தவொரு படமும் கை கொடுக்கவில்லை.
அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஹரிஷ் கல்யாண். ரைசா வில்சன் உடன் அந்த நிகழ்ச்சியில் ரொமான்ஸ் செய்து வந்தாலும், இருவரும் டைட்டிலை வெல்லவில்லை.
இதையும் படிங்க: உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..
ஆனால், யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஹரிஷ் கல்யாண் தனது செகண்ட் இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி சமீபத்தில் தோனி தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு வரை பெற்றார்.
ரைசா வில்சன் உடன் பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கிசுகிசு கிளம்பின. ஆனால், ஹரிஷ் கல்யாண் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். அதே போல பிக் பாஸ் வீட்டில் உயிருக்கு உயிராக காதலித்த ஆரவ்வும் ஓவியாவை கழட்டிவிட்டு இன்னொரு நடிகையை திருமணம் செய்துக் கொண்டார்.
இதையும் படிங்க: ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க!.. புதிய அவதாரமெடுக்கும் லோகேஷ் கனகராஜ்!.. பங்கம் செய்த சினிமா பிரபலம்..
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்த ஹரிஷ் கல்யாண் விரைவில் வெளியாக உள்ள தனது பார்க்கிங் படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவிருப்பதை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் என தொடர்ந்து கை வசம் ஹரிஷ் கல்யாணுக்கு பல படங்கள் உள்ளன.