ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!

by Akhilan |   ( Updated:2023-08-29 06:25:05  )
ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!
X

அரசியல் ஒரு பக்கம், அடுத்தடுத்த பட அறிவிப்பு ஒருபக்கம் என பரபரப்புக்கு இடையே லியோ படத்தின் பிசினஸ் பிச்சிக்கொண்டு எகிறிக்கொண்டு இருக்கிறது. படம் ரிலீஸை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் லியோ. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் சென்சார் விரைவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் இரண்டு வாரத்தில் இந்த சென்சார் நடக்கும். அதிகப்பட்சமாக லோகேஷின் மற்ற படங்களை போல இந்த படத்திற்கு யூ/ஏ சான்று தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினி வேண்டாம்னு சொல்லி சூப்பர் ஹிட் அடித்த ரெண்டு பாட்டு!.. பாட்ஷா பட சீக்ரெட்டை பகிர்ந்த சுரேஷ் கிருஷ்ணா…

சரி விஷயத்துக்கு வருவோம், லியோ படத்தில் விஜயின் பெயர் டேனியல் லியோவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஹரோல்டு தாஸ் அர்ஜூனின் மகன் தான் லியோ விஜய் எனக் கூறப்படுகிறது. சஞ்சய் தத்தாக நடிக்கும் அந்தோணி தாஸின் மகனாக ரோலக்ஸ் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது பங்காளி கதையாக இருக்கும் எனவும் பலர் கிசுகிசுக்கின்றனர்.

மற்றொரு பக்கம், சஞ்சய் தத் தந்தையாகவும் அர்ஜூன் விஜயிற்கு அண்ணனாகவும் நடித்திருக்கிறார் என்கின்றனர். ஆனால் பெரும்பாலும் மூவரும் சொந்தமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இவர்கள் முவரும் சந்திக்கும் காட்சி பெரிய அளவில் பேசப்படும் என படத்தில் நடித்திருக்கும் தவசி ராஜன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு திருப்தியே இல்லை.. மாஸ் ஹிட்டாக மாற்றிய தேவா!. அட அந்த படத்தையா சொன்னாரு!..

ஆனால் அந்த காட்சி குறித்து பெரிதாக விளக்க மறுத்துவிட்டார். கொசகொசனு பேசும் மன்சூர் அலிகான் கூட லியோ படம் குறித்து பேசவே தயங்குகிறார். இது அனைத்துமே லோகேஷின் கெடுக்குபிடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பேட்டி கொடுத்து கொள்ளுங்கள். ஆனால் லியோ படத்தின் ஒரு காட்சி குறித்து கூட கசியவே கூடாது என கறாராக கூறிவிட்டாராம்.

பல மொழி நட்சத்திர நடிகர்கள் தீபாவளி ரிலீஸ் போட்டியில் இறங்க லியோ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. தற்போது வரை படத்தின் வியாபாரம் 500 கோடியை நெருங்கி இருக்கிறது. பட ரிலீஸ் சமயத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story