Connect with us
ajith

Cinema News

ஆர்வமில்லாமல் இருக்கும் அஜித்! – ‘விடாமுயற்சி’ டேக் ஆஃப் ஆகாமல் இருக்க இதான் காரணமா?

நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகும் படம் தான் விடாமுயற்சி. ஆனால் துணிவு படத்திற்கு பிறகு பிப்ரவரி மாதத்திலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்ட படக்குழு சில பல காரணங்களால் படம் இழுத்துக் கொண்டே போனது.

ajith1

ajith1

இதற்கிடையில் அஜித்தின் தந்தை மறைவு , அதன்பின் கதையில் மாற்றம், அஜித்தின் பைக் பயணம் என இன்று வரை அந்தப் படத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் அஜித்தின் சக போட்டியாளராக பார்க்கப்படும் விஜயின் லியோ படம் முக்கால் வாசி முடிந்து விட்டது.

இருவரின் படங்களான வாரிசு, துணிவு ஆகிய படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆனது. அதன் பின் மீண்டும் இருவரின் படங்களும் ஒன்றாக மோதும் என எதிர்பார்த்த நிலையில் அஜித்தின் படத்தில் தொய்வு ஏற்பட்டது. இதை பற்றி பேசிய மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு அஜித்திற்கு  நடிப்பின் மீது ஏதோ ஆர்வம் குறைந்து விட்டதாகவே தெரிகிறது என்று கூறினார்.

ajith3

ajith3

மேலும் அவருக்கு ஏதோ ஒரு அழுத்தம் இருப்பதாகவும் கூறினார் செய்யாறு பாலு. ஆனால் எப்படியோ பிப்ரவரியில் ஆரம்பிக்க வேண்டிய படத்திற்கு இப்போதாவது தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள் என்றும் ஆனால் அஜித்தின் வேர்ல்டு டூர் இருக்கின்றது, அதற்குள் முழு செட்யூலை படத்திற்காக கொடுத்து அஜித் முடித்துக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top