Connect with us

பாக்ஸ் ஆபிஸ் கிங் திரும்ப வருகிறார்.. சொல்லாமல் சொல்லிய தளபதி 66 படக்குழு.! வெறித்தனமான அப்டேட் இதோ…

Cinema News

பாக்ஸ் ஆபிஸ் கிங் திரும்ப வருகிறார்.. சொல்லாமல் சொல்லிய தளபதி 66 படக்குழு.! வெறித்தனமான அப்டேட் இதோ…

தளபதி விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி இயக்குறார். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2023 பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாக உள்ளது. வரும் ஜூன் 22 விஜயின் பிறந்தநாள் என்பதால் வழக்கம் போல விஜய் பட அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதற்கேற்றாற் போல தற்போது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 க்கு படத்தின் முதல் போஸ்டர் வெளியாக உள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – Mr.பிரமாண்டம் ஷங்கர் பற்றி தெரியாதா.?! பழைய ரெக்கார்ட்ஸ பாருங்க.. வாய்பிளந்த தெலுங்கு சினிமா.!

அந்த அறிவிப்பிலேயே HE IS RETURNING… அவர் திரும்ப வருகிறார் என எழுதியுள்ளனர். அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் கிங் திரும்ப வருகிறார் அதனை குறிப்பிட்டு தான் படக்குழு இந்தமாதிரி எழுதியிருக்கின்றனர். என்றும், கடைசியாக வெளியான பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்பதாலும் இப்படி எழுதி இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

எது எப்படியோ, தளபதி 66 படத்தின் மூலம் மீண்டும் மெகா ஹிட்  ஹீரோ தளபதி விஜய் திரும்ப  வந்தால் போதும் என்கிறது தமிழ் திரையுலகம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top