Connect with us

Cinema History

அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? மாறிய டைட்டில்!…

Anbulla rajinikanth: ரஜினிகாந்த் கேமியோ நடிப்பில் வெளியாகி இருந்த ’அன்புள்ள ரஜினிகாந்த்’  திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல ஹீரோ தானாம். ஆனால் நடக்காமல் போக கடைசியாக தான் ரஜினிகாந்த்  இணைந்தார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரபல வசனகர்த்தாவும் தூயவனும், அழகன் தமிழ்மணியும் முதலில் மலையூர் மம்பட்டியான் படத்தை தயாரித்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூலை குவித்தது 200 நாட்களைத் தாண்டியும் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடியது. அந்த சமயத்தில் தூயவனும் அழகன் தமிழ்மணியும் டெல்லியில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கடைசில நாசருமா? வடிவேலு யாரையும் விட்டுவைக்கல போல.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

அங்கு டச் ஆஃப் லவ் என்ற படம் திரையிடப்பட்டது. இதில் எல்லிஸ் பிரஸ்லி என்ற பாப்பா நகர் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். படம் இருவரையும் வெகுவாக கவர்ந்து விட அதை தமிழில் தயாரிக்க முடிவு செய்கின்றனர். சென்னை திரும்பியவுடன் படத்தின் திரைக்கதையை அடுத்த ஒரு மாதத்திற்கு எழுதி முடித்தார்கள்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முதலில் இவர்கள் கேட்டது எம்ஜிஆரை தான். முதல்வராக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தூயவன் அவருக்கு கதை சொல்ல  எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். படத்தில் நடிப்பதாக சொல்லியவர்.மற்ற விஷயங்களை அமைச்சர் அரங்கநாதனிடம் பேசிக்கொள்ளுமாறு அனுப்பி இருக்கிறார்.

 அவரும் கதையை கேட்டுவிட்டு படத்தின் பெயரைக் கேட்க அன்புள்ள எம்ஜிஆர் என கூறியிருக்கிறார் தமிழ்மணி. ஆனால் அதுவரை படத்தின் டைட்டிலை முடிவு செய்யாமல் தான் படக்குழு இருந்து இருக்கிறது. அரங்கநாதனுக்கு பட கதை பிடித்து போக மிகப்பெரிய தொகையை கொடுத்த அதை வாங்கிக் கொள்ளவா என கேட்கிறார்.

இதையும் படிங்க: எல்லாரும் பாருங்க.. ஃப்ரி ஷோ!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் பிரியா ஆனந்த்…

நிச்சயமாக எடுக்கப்படும் வேண்டும் என ஆசைப்பட்ட கதை என்பதால் பிச்சை எடுத்தாவது தாங்களை எடுக்க வேண்டும் என முடிவு செய்த தமிழ்மணியும் தூயவனும் இன்னொரு ஹீரோவை தேடி அலையத் தொடங்குகின்றனர். தேவர் பிலிம்ஸில் ரஜினி நண்பர் கே நடராஜை பார்த்து விஷயத்தை கூற அவர் ரஜினியிடம் பேசவைத்து இருக்கிறார்.

ரஜினிக்கு கதை ரொம்பவே பிடித்து போக முதலில் ஆறு நாட்களை கால்ஷீட்டாக கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பில் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கக் கூடாது என்பதற்காக தனக்காக எந்த உதவியாளர்களையும் வைத்துக்கொள்ளவில்லையாம். மேலும் 10 நாட்கள் கால்ஷீட் தேவைப்பட ரஜினி அந்த நாளுக்கு சம்பளமே வாங்கவே இல்லையாம்.

இதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க தயாராக இருந்த அன்று பிரபல நாளிதழில் தான் அன்புள்ள ரஜினிகாந்த் என்று படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதாம். அதுவரை அப்படத்தினை பெயர் ரஜினிக்கே தெரியாமல் தான் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படித்தான் எம்ஜிஆர் போய் ரஜினி வந்தாராம். இப்படத்தில் தான் ரஜினிகாந்த் மனைவி லதா  கருணை உள்ளமே பாடலையும் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு பின்னால் இப்படி ஒரு அதிர்ச்சி சம்மந்தமா? பயில்வான் வெளியிட்ட பகீர் தகவல்

google news
Continue Reading

More in Cinema History

To Top