Connect with us

Cinema History

சினிமாவில் தொடர ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்… இரண்டே படத்தால் அவர் ஆசையை உடைத்த பிரபல இயக்குநர்..

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய இடம் எம்.ஜி.ஆருக்கு உண்டு. ஒரு கதாநாயகன் எப்படி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 60களின் மாஸ் நாயகனை உருவாக்கிய பெருமை அவரையே சேரும். வில்லனிடம் அவர் மூன்று அடிகள் வாங்கிய பின்னர் அவரை துவைத்து எடுக்கும் போதும் தியேட்டர்களில் விசில் சத்தம் பறந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

1936ல் சதிலீலாவதி திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். அங்கிருந்து தொடங்கிய அவர் பயணம் பல வெற்றி படங்களை கோலிவுட்டிற்கு தந்தது. 

இதையும் படிங்க: இன்னொரு பழம் எங்க… கவுண்டமணியை அலறவிட்ட கரகாட்டக்காரன் காமெடிக்கு விடை கொடுத்த செந்தில்…

இச்சம்பவத்திற்குப் பின்னர் வெளிவந்த காவல்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் தான். அதன்பின்னர் அவருக்கு அரசியலில் மிகப்பெரிய புகழ் கிடைத்து அதில் ஈடுப்பட துவங்கிவிட்டார்.

இதையும் படிங்க: இமயமலையில் டிரக்கிங்!.. பாபா குகையில் தியானம்!.. தீயாக பரவும் ரஜினியின் புகைப்படங்கள்!…

ஒருகட்டத்தில் அவருக்கும் சினிமா ஆசை இருந்து இருக்கிறது. மீண்டும் நடிக்கலாம் என்ற முடிவில் இருந்து வந்திருக்கிறார். ஆனால் அந்த ஆசையை உடைத்த பெருமை பாரதிராஜாவை தான் சேரும் என்கிறார் பிரபல திரைப்பட விமர்சகர் டாக்டர் காந்தராஜ்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, வெற்றிவிழா ஒன்றில் எம்.ஜி.ஆர் இதை கூறி இருக்கிறார். தான் சினிமாவில் மீண்டும் வராமல் போனதற்கு காரணமே பாரதிராஜா தான். அவர் வந்ததால் தான் நான் வராமல் போனேன். முதல்வர் ஆனால் கூட சில விதிகளை வைத்து வரலாம் என்று நினைத்தேன். அப்போது தான் 16 வயதினிலே படம் வெளியாகி இருந்தது.

அதை பார்க்கும் போது மிரண்டு விட்டேன். ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக அமைத்த காட்சிகள் கூட பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. வேற மாதிரியான படமாக இருந்தது. அடுத்து கிழக்கே போகும் ரயில் திரைப்படம் வெளிவந்தது. அந்த படம் ஓடோ ஓடுனு ஓடியது. அப்போது தான் புரிந்து கொண்டேன். சினிமா உலகம் மாறிவிட்டது. இனி என் சினிமா பாணி எடுப்படாது என்பதால் தான் அந்த ஆசையை விட்டு விட்டதாக எம்.ஜி.ஆர் கூறியதாக குறிப்பிட்டார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top