ரஜினி வருஷத்துக்கு ஒரு படமாவது நடிக்க இவர்தான் காரணமாம்!... இப்படி எல்லாம் நடந்திருக்கா?

Rajni24
சமீபத்தில் ராமராஜன் படங்களை ரஜினி படத்துடன் கம்பேர் பண்ணி சில நெட்டிசன்கள் பதிவு போட்டார்கள். அதற்குப் பதில் அடி கொடுக்கும் வகையில் பிரபல விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ரஜினி 80களுக்குப் பிறகு 35 ஆண்டுகளாக தமிழ்த்திரை உலகில் யாராலும் அசைக்க முடியாத நபராக இருந்தார். அவர் தான் இன்று வரை வசூல் சக்கரவர்த்தி. ராஜாதி ராஜா, கரகாட்டக்காரன் வந்த காலகட்டத்தில் கரகாட்டக்காரன் இன்டஸ்ட்ரி ஹிட். ஆனாலும் ஒரு சில இடங்களில் ராஜாதி ராஜா தான் அதிக நாட்கள் ஓடியது.
ரஜினியைப் பொறுத்தவரை மற்ற நடிகர்களின் படங்கள் எப்படிப் போகுது என்று தெரிந்து கொள்hர். ஆனால், அவர் யாரைப் பார்த்தும் எந்தக் காலகட்டத்திலும் பயந்தது கிடையாது என்று தெளிவாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Murattukalai
நீண்டகாலமாக தயாரிக்காமல் இருந்த ஏவிஎம் நிறுவனத்திற்கு முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன் என்று நல்ல நல்ல படங்களாக அடுத்தடுத்து நடித்துக் கொடுத்தார் ரஜினி. 80 மற்றும் 90களில் ஒரு பத்து நடிகர்களுக்கு படங்கள் நல்லா ஓடியது. அது ஒரு பொற்காலம்.
ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன், மோகன், முரளின்னு இவங்க நடிச்ச எல்லாப் படங்களுமே சூப்பர்ஹிட்டாத் தான் இருக்கும். ஆனாலும் அப்பவே பாக்ஸ் ஆபீஸ் கிங்னா அது ரஜினி மட்டும் தான்.
இதையும் படிங்க... விஜய் பட நடிகைக்கு விஜயகாந்த் வைத்த செல்லப் பெயர்!.. குசும்பு பிடிச்சவர் போல கேப்டன்!..
அப்போ நிறைய படங்கள் நடிச்சதால தான் பிற்காலத்தில் படங்கள் நடிப்பதையே குறைத்துக் கொண்டாராம் ரஜினி. ஒரு கால கட்டத்துல படங்களோட எண்ணிக்கைக் குறைய காரணம் இதுதான். ஒரு தடவை வயசாயிடுச்சு. ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன். ஒதுங்கிக்கலாம்னு இருக்கேன்னு சொன்னாராம் ரஜினி.
வருஷத்துக்கு ஒரு படமாவது கொடுங்க... உங்கள மாதிரி மனிதர்களால தான் எங்களை மாதிரி தியேட்டர்காரங்க எல்லாம் பொழைச்சிக்கிட்டு இருக்கோம்னு திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னாராம். 1975ல் அறிமுகமாகி இப்போ ஜெயிலர் வரை வசூலில் உச்சத்தில் இருக்கிறார்னா அது சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும் தான் என்று சொல்லலாம்.