சீன் போட்ட ஜெய்.. அவர் வேணாம் நீ நடி.. சசிகுமார் நாயகனாக இவர் தான் காரணம்...

by Akhilan |   ( Updated:2022-10-20 06:35:10  )
சசிகுமார்
X

சசிகுமார்

நடிகர் ஜெய் தன்னால் உடனே நடிக்க முடியாது. எனக்கா வெயிட் பண்ணனுங்க என போட்ட சீனால் தான் நடிகர் சசிகுமார் நாயகனாக மாறினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1980களில் மதுரையின் கதைக்களத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார் அறிமுக இயக்குனராக களமிறங்கியது மட்டுமல்லாமல் அப்படத்தில் ஜெய்யுடன் ஒரு நாயகனாகவும் நடித்திருந்தார். ஜேம்ஸ் வசந்தன் இசையில் கண்கள் இரண்டால் பாடல் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு சமுத்திரகனி மற்றும் சசிகுமார் சந்தித்து இருக்கிறார்கள். 7 வருடமாக அவரிடம் இருந்த சுப்ரமணியபுர கதையை நண்பர் என்ற முறையில் கூறியிருக்கிறார்.

சசிகுமார்

சசிகுமார்

உடனே சசிகுமார் நானே படத்தினை தயாரிக்கிறேன் எனக் கூறினாராம். சமுத்திரகனிக்கு ஆச்சரியமாகி விட்டதாம். சசிகுமார் படத்தினை உடனே எடுக்கலாம். ஜெய் பின்னாடி இருக்கிறார் அவரிடம் கதை சொல்லிடுப்பா என்றாராம். சமுத்திரகனியோ, ஜெயினை சந்தித்து சசிகுமார் கதை சொல்ல சொன்னதாக கூறினாராம். ஆனால், ஜெய், நான் ரெண்டு படம் கமிட் பண்ணிருக்கேன் சார். அது முடிச்சிட்டுதான் வரேன். வெயிட் பண்ணுங்க என்றார்.

சமுத்திரகனி நேரே சசிகுமாரிடன் சென்றார். இந்த விஷயத்தை கூறி நீயே ஹீரோவாக நடிப்பா என்றாராம். ஆனால் சசிகுமார், நான் எடுத்த படமே இன்னும் வெளிவரல. என்ன எப்படிப்பா ஏத்துப்பாங்க எனக் கேள்வி எழுப்பினார். ஆனால், சமுத்திரகனி நீ தான் நடிக்கிறே எனக் கூறிவிட்டு சென்றாராம்.

சசிகுமார்

சசிகுமார்

இதை தொடர்ந்து மைக்கேல் ராயப்பனிடம் கதை சொல்ல சென்று இருக்கிறார் சமுத்திரகனி. 10 மணிக்கு அவரை காண அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்கிறார் ராயப்பன். ஆனால் சமுத்திரகனியோ 9.50க்கு அவர் அலுவலகத்தில் இருந்தாராம். அவர் ரூமின் கதவை சமுத்திரகனி திறக்கும்போதே “படம் பண்ணலாம். ஏற்பாட்டை பண்ணுங்க’ என மைக்கேல் ராயப்பன் சொல்லிவிட்டார். என்ன சார் கதையே சொல்லலையே நான் என சமுத்திரகனி அதிர்ந்தார். இங்கு நான் வர சொன்ன அனைவருக்கிடையில் நீங்கள் தான் சரியான நேரத்துக்கு முன்னாடியே வந்தது. அதற்காக தான் இது எனக் கூறினாராம். இதை தொடர்ந்து சசிகுமார் நடிக்க சமுத்திரகனி இயக்க படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: சாதாரண கேட்டரிங் பையன்… பின்னாளில் வெற்றி இயக்குனர்!! சமுத்திரக்கனி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்…

Next Story