Categories: Cinema News latest news

தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் இவர்தானா? அடடே! இத நாங்க யோசிக்கவே இல்லையே! ரவியின் சர்ப்ரைஸ்!

Thani oruvan: ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் இவர் தான் என சில சர்ப்ரைஸ் தகவல்களை ஜெயம் ரவி வெளியிட்டு இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்தனர். இதில் கதையின் நாயகனாக ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக நடித்தார். அதை தொடர்ந்து ரவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் இறைவன்.

Also Read

இதையும் படிங்க: ஹாலிவுட்லயே கூப்பிட்டாங்க!.. கெத்து காட்டிய அட்லி.. மொக்கை பண்ணிய புளூசட்ட மாறன்..

இப்படத்தினை அஹமத் இயக்கி இருக்கிறார். நயன் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பல நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் வரும் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக அறிவித்தனர். இப்படத்திற்கு சென்சார் க்ளீன் ஏ கொடுத்திருப்பதும் படத்தின் மீது ஆர்வத்தினை கிளப்பி இருக்கிறது.

இப்படத்தினை தொடர்ந்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதை இயக்குனர் ஜெயம் ராஜா இயக்க இருக்கிறார். ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜயிற்கு இந்த பழக்கமே கிடையாது… பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…! அனுஷ்காகே இப்டியா?

ஆனால் தனி ஒருவன் படத்தின் வெற்றியே அப்படத்தின் வில்லன் சித்தார்த் அபிமன்யூ தான். ஆனால் முதல் பாகத்திலேயே அந்த கேரக்டர் கொலை செய்யப்பட்டு விட்டதால் இரண்டாம் பாகம் யார் வில்லனாக இருப்பார்கள் என்ற ஆவல் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய ரவி, இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு சில தேர்வுகள் முடிவாகி இருக்கிறது. அரவிந்த் சாமி போல அவர் வில்லனாக நடித்தவராக கூட இல்லாமல் இருக்கலாம் என்றார். இதற்கிடையில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, அனுராக் ஆகியோர் இப்பட்டியலில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இல்லாமல் ஆச்சரியமாக சில ஹீரோ நடிகர்களிடமும் கதை சொல்லி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
Akhilan