சிவாஜி-கண்ணதாசன் இடையே எழுந்த உரசல்!.. பாட்டெழுத மறுத்த கவியரசர்.. கடைசியில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா?..
1950களின் இறுதியில் சிவாஜி, கண்ணதாசன், கருணாநிதி ஆகியோர் திராவிட கழகத்தில் முழு மூச்சுடன் செயல்பட்ட நேரம் அது. கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையை உடையது தான் திராவிடத்தின் கொள்கை. அந்த கழகத்தில் இருந்து கொண்டே சிவாஜி ‘சம்பூரண ராமாயணம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
இது கண்ணதாசனுக்கு ஒரு வித கசப்பான ஒன்றாக தெரிந்திருக்கிறது. அந்த படம் கடவுள் சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படமாகும். உடனே கண்ணதாசன் தான் நடத்திக் கொண்டிருந்த ‘தென்றல் திரை’ பத்திரிக்கையில் சிவாஜியை பற்றி கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார்.
சிவாஜி நடித்த தெனாலி ராமன் படத்தில் ஒரு யானை சிவாஜியின் தலையை மிதிக்கும் போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதே மாதிரியான புகைப்படத்தை அந்த பத்திரிக்கையில் அச்சடித்து கூடவே ‘இது தான் சிவாஜியின் எதிர்காலம்’ என்றும் வாசகத்தை அச்சிட்டார்.
அதை பார்த்த சிவாஜிக்கு ஒரே கோபம். ஒரு சமயம் வாகினி ஸ்டூடியோவில் ஒரு தளத்தில் சிவாஜியின் படப்பிடிப்பும் மறுதளத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணதாசன் அந்த ஸ்டூடியோவிற்கு வர அதை அறிந்த சிவாஜி மிகுந்த கோபத்துடன் அவரை துரத்திக் கொண்டே வந்திருக்கிறார். உடனே கண்ணதாசன் வேகமாக என்.எஸ்.கிருஷ்ணன் இருந்த தளத்திற்கு சென்று விட்டாராம்.
இதையும் படிங்க : நடிப்பில் சிவாஜிக்கு இணையாக போற்றப்பட்டவர்!…சாவித்ரியை சகலகலாவள்ளியாக சித்தரித்த 5 திரைப்படங்கள்!..
இவர்களின் சம்பவத்தை பார்த்த கிருஷ்ணன் இருவரையும் சமாதானம் படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். அதிலிருந்தே சிவாஜி அவருடைய படங்களுக்கு கண்ணதாசன் பாட்டெழுத கூடாது என்று சொன்னதில்லை. ஆனால்
நடந்தது இவர்களுக்கு இடையே ஒரு விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் பிறகு சிவாஜியின் படத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் பாடல்களை எழுதியிருக்கிறார். அதனையடுத்தும் ஒரு படத்திற்கு பட்டுக்கோட்டை எழுத ஒரு தாலாட்டு பாடல் எழுத கண்ணதாசன் தான் சரியான ஆளு என்று சுந்தரமே சொல்ல கண்ணதாசனோ சிவாஜியின் படத்திற்கு இனிமேல் சரிவராது என்று சொல்லியிருக்கிறார்.
பின் ஒரு வழியாக மூன்று பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இறுதியாக பாசமலர் படத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுத அதை போட்டு கேட்டிருக்கிறார் சிவாஜி. பாடலை கேட்டதும் கண்ணதாசனை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். கூடவே எம்.எஸ்.வியுன் இருந்திருக்கிறார்.
கண்ணதாசன் வந்ததும் சிவாஜி தன் இரு கைகளையும் விரித்து கொண்டே வந்து சரஸ்வதி, சரஸ்வதி , நீ ஒரு சரஸ்வதியா என்று கட்டி அணைத்துக் கொண்டாராம். உடனே கண்ணதாசன் அழுக நான் பத்திரிக்கையில் எழுதியது தவறுதான் என்று சொல்ல சிவாஜி அதையெல்லாம் மறந்துவிடும், இனிமேல் என் படங்களுக்கு நீர் தான் பாட்டெழுத வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை நெல்லை ஜெயந்தா கூறினார்.