ஹீரோயிசத்தை விட்டுக் கொடுக்க மாட்டேனு சொன்னா இப்படித்தான்! மோகன், ராமராஜன் கற்றுக் கொண்ட பாடம்

Mohan Ramarajan: செகண்ட் இன்னிங்ஸ் என்ற பெயரில் 80களில் கொடி கட்டி பறந்த மோகன் ராமராஜன் இவர்களின் படங்கள் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியானது. அதில் ஹரா திரைப்படம் நேற்று தான் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு ஹரா திரைப்படம் மக்களை பூர்த்தி செய்யவில்லை. அதேபோல ராமராஜன் நடித்து வெளியான சாமானியன் திரைப்படமும் அந்த அளவுக்கு மக்களை திருப்தி படுத்தவில்லை.

இதைப்பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஹரா திரைப்படத்தில் ஒரு பெண்ணுக்கு அப்பாவாக மோகன் நடித்திருப்பார். ஆனால் வயது சரியாக இருந்தாலும் அவருடைய தோற்றம் இன்னும் இளமையாகவே இருக்கின்றது. அந்த அப்பாவுக்கு உண்டான லுக் இந்த படத்தில் மோகனுக்கு இல்லவே இல்லை. அதை அப்படியே அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என தனஞ்செயன் கூறினார்.

இதையும் படிங்க: சுகன்யாவுக்கு நடந்தது காஜலுக்கு நடக்காது! இந்தியன் 2 படத்தை பற்றி பிரபலம் சொன்ன தகவல்

மேலும் கூறிய தனஞ்செயன் ராமராஜன் மோகன் இவர்களை பொருத்தவரைக்கும் அவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்த்த ஒன்று என்னவெனில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஹீரோயிசமாக இல்லாமல் லாயலாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக 70 வயதுக்கு பிறகு அமிதாப்பச்சன் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

அதில் அவர் ஹீரோயிசம் காட்டி அதாவது சண்டை போடுவது துப்பாக்கி எடுத்து சுடுவது என்று இல்லாமல் ஒரு லாயலாக கேரக்டர் சார்ந்த படங்களாக, அந்தப் படமே அவரை வைத்து நகரும் மாதிரியான கதைகளில் நடித்தார். அதனால் தான் ஆரம்பகால உள்ள படங்களை விட 70 வயதுக்கு பிறகு அமிதாப்பச்சன் நடித்த படங்கள் அதிகளவு மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: இயக்குனர் மறுத்தும் விடாமல் கவர்ச்சி விருந்தைக் காட்டிய நயன்தாரா… என்ன ஒரு எளிமை…!

இந்த மாதிரி ராமராஜன் மோகன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மக்கள் ஏற்பார்கள். அதை விட்டுவிட்டு ஒரு படத்தில் நான் தான் எல்லாம் பண்ணுவேன். நான்தான் சண்டை போடுவேன். நான்தான் அடிப்பேன் என்று இவர்கள் வரும்போதுதான் அந்தப் படங்கள் மக்களை பெரிதாக கனெக்ட் செய்வதில்லை. இப்படி இவர்கள் வரும்போது ஆடியன்ஸ் எதிர்பார்ப்பது வேறு.

அதனால் இனிமேலாவது மோகன் மற்றும் ராமராஜன் ரிஸ்க்கான கதைகளாக இருந்தாலும் பரவாயில்லை என் வயதுக்கு ஏற்ற கதை என கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடித்தால் இவர்களை கண்டிப்பாக ஏற்பார்கள். இருந்தாலும் இருவருக்குமே இன்னும் அதிகளவு ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை இனிமேல் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளை வைத்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என தனஞ்செயன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயை அரசியலில் தள்ளிய அந்த 2 சம்பவங்கள்… இப்போது காய் நகர்த்துவது சரிதானா..?

 

Related Articles

Next Story