அட என்னங்க இப்படி..! பாய்ஸ் மணிகண்டன் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

Manikandan: ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் செமையாக செட்டாகி விட்டனர். இதில் மிஸ்ஸான ஒரே ஆள் நடிகர் மணிகண்டன் தான். ஆனால் தற்போது அவரும் ஒரு புது ரூட்டை பிடித்து இருக்கிறார். இது பலரிடத்திலும் அப்ளாஸ் வாங்கப்பட்டு வருகிறது.

ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் பாய்ஸ். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவின் சிபாரிசில் ஆடிஷனில் கலந்து கொண்டு முன்னா கேரக்டருக்கு வந்தவர் நடிகர் சித்தார்த். தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கும் சித்தார்த்தின் லேட்டஸ்ட் படமான சித்தா லைக்ஸ் குவித்து இருக்கிறது.

இதையும் படிங்க: இயக்குனர் பாலாவை தப்பாக புரிந்து கொண்டு திட்டிய நடிகை… கடைசியில் காலில் விழுந்து கதறிய அதிர்ச்சி சம்பவம்!

இதையடுத்து, ஷங்கர் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் பார்த்து பரத்தை ஆடிஷன் செய்து அவரையும் ஓகே செய்தார். பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் பரத் இன்னமும் நடிகராக தான் இருந்து வருகிறார். இசையமைப்பாளர் தமனுக்கும் ஆடிஷன் வைத்து அவரும் தேர்வு செய்யப்பட்டார். தற்போது தமன் கோலிவுட்டின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார்.

தேவயானியின் முதல் தம்பி படத்தினை ஆடிஷனுக்கு அனுப்ப அதில் இருந்த நகுல் தான் வேண்டும் எனக் கேட்டு ஓகே செய்தார் ஷங்கர். நகுல் தற்போது ரியாலிட்டி ஷோ நடுவராக இருக்கிறார். விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து விட்டு டான்ஸ் மாஸ்டர் கலா குழுவில் இருந்த மணிகண்டனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சில பட வாய்ப்புகள் வந்தாலும் மணிகண்டனால் மிகப்பெரிய வரவேற்பை பெற முடியவில்லை.

இதையும் படிங்க: கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி

பல நாள் ப்ரேக் கொடுத்தவர். மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தற்போது ஜிட்டு என்ற குழந்தைகள் பார்க்கும் வீடியோவை உருவாக்கி யூட்யூப் மற்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் இது மாதிரி ஆங்கிலத்தில் வெளிநாட்டில் செய்து வருகின்றனர். மணிகண்டன் இதை தமிழில் செய்து வருவது அனைவரிடத்திலும் தற்போது அப்ளாஸ் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டனின் யூட்யூப் சேனலைப் பார்க்க: https://www.youtube.com/@Jittuforkids/videos

 

Related Articles

Next Story