பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியா இருக்கேன்… அவர் மீது எனக்கு ஓவர் லவ்வு… ரொமான்டிக்காக பேசும் நாயகி!...

by Akhilan |
பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியா இருக்கேன்… அவர் மீது எனக்கு ஓவர் லவ்வு… ரொமான்டிக்காக பேசும் நாயகி!...
X

Prabhu: நடிகர் பிரபுவை நான் காதலித்து வருகிறேன். அவருக்காக தான் நான் இந்த படத்தில் கூட நடித்தேன். இப்போ என்னை சின்ன வீடாக அழைத்தால் கூட உடனே ஓடிவிடுவேன் எனக் கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. அம்மாவை போல மகளுக்கு பெரிய அளவில் நடிப்பு சரியாக அமையவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் தொடர் தோல்வியை தழுவியது. நியாயங்கள் ஜெயிக்கும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?

ஆனால் அவருக்கு ஆறு படத்தின் சரோஜா அக்கா, எஜமான் படங்கள் தான் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் அம்மாவுடன் இல்லாமல் தனியாக வசித்து வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, ரோஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது.

ஆனால் ஒரு தெலுங்கு படத்துக்காக என் பாட்டியால் அந்த வாய்ப்பு மிஸ்ஸானது. அதுமட்டுமல்லாமல் தளபதி படத்திலும் ஷோபனா கேரக்டர் எனக்கு தான் கிடைத்தது. ஆனால் அதையும் மிஸ் செய்து விட்டேன். நான் சின்ன வயதில் இருந்து சூர்யாவுடன் தான் இருப்பேன். அவனை சரவணன் என்று தான் அழைப்பேன்.

இதையும் படிங்க: கமல் எட்டி உதைத்ததில் காற்றில் பறந்த சேர்… பதறியடித்த படக்குழு!.. நடந்தது இதுதான்!..

சிவக்குமார் சார் எனக்கு நிறைய சொல்லி தருவார். நான் 16 வயது இருக்கும் போதில் இருந்து பிரபுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அழகாக இருப்பார். சிரிப்பை பார்த்தாலே மயங்கி விடுவேன். அப்போதில் இருந்து எனக்கு அவர் மீது ரொம்பவே காதல் இருந்தது.

ஆனால் இன்னமும் அந்த காதல் ஓயவில்லை. இது பிரபுவின் மனைவி புனிதாக்கு கூடத் தெரியும். பிரபுவின் ஜோடியாக நடிக்க இருந்ததால் தான் சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்போது கூட என்னை சின்ன வீடாக அழைத்தால் சென்று விடுவேன் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: எனக்கு வாழ்க்கை கொடுத்தவரே வடிவேலு தான்… பெற்றோருக்கு மேல் அவர்!… புகழ்ந்த பிரபல நடிகர்…

Next Story